Vaithikasri August 2008
வைதிக ஸ்ரீ:

ஸூர்ய கிரஹணம் 01.08.2008 வெள்ளி

 ஆடிமாத அமாவாஸையான இன்று மாலை ஸுமார் 04.40 மணிக்கு கேது கிரஸ்தமாக (கேதுவால் மறைக்கப் பட்டதாக)ஸூர்யகிரஹணம் நிகழ்கிறது. ச் இந்திய ஸ்டாண்டர்டு மணிப்படி  இன்று மாலை ஸுமார் 04.40 மணிக்குத் துவங்கும் இந்த ஸூர்யகிரஹணம் மாலை ஸுமார் 06.07மணிக்கு முடிவடைகிறது.  இன்று காலை நித்ய கர்மாக்களை செய்துவிட்டு வழக்கம்போல்அமாவாஸை தர்ப்பணத்தை செய்துவிட வேண்டும்.

ச்இன்று காலை முதல் பகல் முழுவதும் (குழந்தைகள்முதியவர்கள் நோயாளிகள் ஆகியோர் மதியம் 11 மணிக்கு மேல்) போஜனம் செய்யக் கூடாது.

ச் கிரஹணம் ஆரம்பித்த (பிடித்த) உடன்  ஸுமார்மாலை 04.41மணிக்கு ஸமுத்திரம்குளம்,ஏரி, நதி அல்லதுவீட்டுக்கிணற்றில் முறையாக ஸங்கல்பம் செய்து கொண்டு கிரஹண ஸ்பர்ச (பிடித்த) ஸ்நானம் செய்ய வேண்டும், ச்மாலை 04.42 மணி முதல் மாலை 0525 மணிக்குள் கிரஹணத்தில் செய்ய வேண்டிய தர்ப்பணத்தை  ஸூர்யோ பராகபுண்ய காலே பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே என்று சொல்லி தர்ப்பணம் செய்யவேண்டும்(தர்ப்பண ஸங்கல்பம்)

ச்மாலை 04.41 மணி முதல் 06.07 மணிவரை மந்திரங்களை உபதேசம் செய்து கொள்ளுதல் உபதேசமான மந்திரத்தை  ஜபம் செய்தல் ஸ்தோத்ர பாராயணம் செய்தல் கிரஹணபரிஹார தானங்கள் செய்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.  ச்மாலை06.10மணிக்குமேல் கிரஹண மோக்ஷ (விட்ட) ஸ்நானம் முறையாக செய்ய வேண்டும், ச்பிறகு ஸாயம்(மாலை) ஸந்த்யா வந்தனம் செய்து விட்டு இரவில் போஜனம் செய்யலாம்.  ச் இன்று செய்ய வேண்டிய

அமாவாஸை திதி சிரார்த்தம் நாளை (020808 சனி) அன்று செய்ய வேண்டும்.

 01082008 வெள்ளி மாலையில் நிகழும் ஸூர்ய க்ரஹணத்தின் போது  முழு (மட்டையுடன் கூடிய) தேங்காய் கோதுமையுடன் தக்ஷிணை சேர்த்து தானம் செய்து பரிஹாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள் : புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம், உத்திரட்டாதி நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் .

 

ஸந்தேஹம்: 01.08.08 ஸூர்யகிரஹணத்தன்று கிரஹண தர்ப்பணம் மட்டும் செய்தால் போதுமா? காலையில் அமாவாஸை தர்ப்பணமும் செய்ய வேண்டுமா?

நிவாரணம்: ஒரேநாட்களில் ஒரேபித்ருக்களைக்குறித்து இரண்டு முறை ச்ராத்தம் (தர்ப்பணம்) செய்ய நேரிட்டால், அதற்கு பதிலாக ஒரே முறை செய்தாலும் போதும், (போனால் போகிறது என்பதைப்போல்) என்று அனுமதிக்கிறது சாஸ்திரம், இதற்கு அப்யநுக்ஞாவிதி: எனப்பெயர்,

இரண்டு முறை ச்ராத்தம் (தர்ப்பணம்) செய்வதை சாஸ்த்ரம் தடுக்கவில்லை, இரண்டுமுறை செய்தால் தோஷம் என்பதும் குறிப்பிடப்படவில்லை,

மேலும் இவ்வாறு இரண்டு செயல்களை  ஒன்றாகச் சேர்த்து செய்வதற்கு மீமாம்ஸா சாஸ்திரத்தில் தந்திரானுஷ்டானம் என்று பெயர், அதாவது இரண்டு செயல்களும் ஒரே மாதிரியாக இருந்தால் ஒன்றாக இணைத்துச்செய்யலாம்,

இங்கு ஒரே மாதிரியாக என்றால்  என்ன பொருள்?, தேசகால கர்த்ரைக்யே தந்த்ரம் என்பதாக தேசம் (செய்யவேண்டிய இடம்), காலம் (செய்யவேண்டிய காலம்)கர்த்தா (செய்யும் கர்த்தாநபர்), ஆகிய மூன்றும் இரண்டு செயல்களுக்கும் ஒன்றாக இருந்தால்தான் தந்த்ரானுஷ்டானம் என்பது வரும்.

இந்த ஸமயத்தில் 01.08.08ல் நிகழும் ஸூர்ய கிரஹணம் மாலை ஸுமார் 04.41 மணிக்குத்துவங்குகிறது, அமாவாஸை தர்ப்பணம் செய்ய வேண்டிய காலம் அபராஹ்ணம்(மதியம் 02.48 மணிக்குள்) , கிரஹண தர்ப்பணம் செய்யவேண்டிய காலம் 04.41 மணிக்குப்பிறகு, இது ஸாயங்காலத்தில்,

ஆகவே அமாவாஸை தர்ப்பணத்துக்கும் கிரஹண தர்ப்பணமும் வெவ்வேறு காலங்களில் ஸம்பவிப்பதால் தந்த்ரானுஷ்டானம் செய்ய இயலாது

ஆகவே (01.08.08) அன்று காலையில் வழக்கம்போல் அமாவாஸை தர்ப்பணம் செய்து விட்டு மாலையில் கிரஹண காலத்தில் ஸூர்யகிரஹண நிமித்தமான தர்ப்பணத்தையும் தனித்தனியாகச் செய்ய வேண்டும் என்பதே தர்ம சாஸ்திரக்காரர்களின் அபிப்ராயம்.

Back

Copies of these Books are available only with vaithikasri, # New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet,
Chennai-600 018. Tamil Nadu, India, Ph: 91-44- 24361210. vaithikasri@yahoo.com
Price & Payment Details
You can order it now using our Secure On-Line Form
CLICK HERE TO ORDER NOW.