Let us Vedic priest Enter Your Home Every Month

Vaithikasri September 2009 
 News

வைதிகஸ்ரீயின் 7ஆம் ஆண்டு துவக்க விழா

ஸ்ரீபகவத் க்ருபையால் வைதீகஸ்ரீயின் 7ஆம் ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 1,2, தேதிகளில் பாண்டிச்சேரி, குறிஞ்சிநகர், ஞானவிநாயகஆலயத் தில் சிறப்பாக நடைபெற்றன. 01.08.09 சனி மாலை ப்ருஹ்மஸ்ரீ வைத்யனாத தீக்ஷித ரின் விராடபர்வா ப்ரவசனம் 02.08.09 ஞாயிறு காலை கஜ பூஜை கோ பூஜை, விசேஷ ஹோமங்கள் மாலை வடகுடி ப்ரும்ஹஸ்ரீ ராமதீக்ஷிதரின் ப்ரவசனம் வைதீகஸ்ரீ ஆன்மீக விளக்கக்கூட்டம் மாலை குருஜி மஹாத்மா பூஜ்யஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் சிறப்பு அருளுரை ஆகிய நிகழ்ச்சிகள் பொது மக்களின் ஆதரவுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றன.  இதில் நூற்றுக்கணக்கான வாசகர்கள் கலந்துகொண்டார்கள் வைதிகஸ்ரீ சார்பாக பாண்டிச்சேரி வைதிகர்கள் ஸம்பாவனை வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள், நிகழ்ச்சியின்  படங்கள் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்


ஸ்வாமி சிவானந்தாவின் ஜயந்தியை முன்னிட்டு ஸ்ரீ சிவானந்தாவின் கருத்துக்கள் என்னும் தலைப்பில் வைதிகஸ்ரீ ஆசிரியரின் பிரவசனம் 02.09.2009 புதன் மாலை மதுரையில் ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவில் அருகில் நடைபெறுகிறது. விபரங்களுக்கு போன்  09442090073.


வைதிகஸ்ரீ: புது எண் 488 டி.டி.கே ரோடு, சென்னை.18

ஆன்மீக விளக்கக்கூட்டங்கள்  (128,129,130,131,132,133ஆவது  )


(128) நாள்: 06.09.09 ஞாயிறு மாலை 4.00 முதல் 5.30 மணிவரை:

இடம்:  ரத்னகிரீஸ்வரர் ஆலயம், பெஸன்ட்நகர்,

பொருள்:  நமது சாஸ்திரங்கள்  தர்ம சாஸ்திரம் - ஸந்தேஹ விளக்கங்கள் போன்: 24910405


(129)நாள்: 06.09.09 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.30 மணிவரை

இடம்:  ஸ்ரீ அயோத்யா மண்டபம், மேலமாம்பலம். போன் : 24893077 

பொருள்:  மஹாளயபக்ஷம் எப்போது? எப்படி? விளக்கங்கள் ஆன்மீக ஸந்தேஹ விளக்கங்கள்


(130)நாள்: 13.09.09 ஞாயிறு மாலை 4.00 முதல் 5.00 மணிவரை

இடம்: வேணுகோபாலஸ்வாமி ஆலயம், கோபாலபுரம்.போன் :9382643958

பொருள்:  தர்ப்பணம் செய்யும் முறைகள்  ஆன்மீகஸந்தேஹ விளக்கம்


(131)நாள்: 13.09.09 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.30 மணிவரை

இடம்:   அர்த்த நாரீஸ்வரர் ஆலயம், நங்கநல்லூர். போன் : 9444108022

பொருள்: ஹிரண்ய சிராத்தம் தர்ப்பணம் ஆன்மிக ஸந்தேஹ விளக்கம்


(132) நாள்: 20.09.09 ஞாயிறு  மாலை 6.00 முதல் 8.30 மணிவரை

இடம்:  தாம்ப்ராஸ் திருமணமண்டபம், நெ 18, ஸுப்பிரமண்ய பிள்ளை தெரு , எஸ்.எஸ்.காலனி. மதுரை.16  போன் :045226019204358920.

பொருள்:மாதரின் மஹிமைகளும் பெண்தெய்வ வழிபாடுகளும் -ஆன்மீக ஸந்தேஹ விளக்கங்கள்

(நிகழ்ச்சி ஏற்பாடு  தாம்ப்ராஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கோவை)


(133)நாள்: 27.09.09 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.30 மணிவரை

இடம்:   ஸ்ரீ சங்கர குருகுலம், அபிராமபுரம். போன் : 9940049726

பொருள்:சாஸ்த்ரீய கல்வியும்கற்கும் முறைகளும்ஸந்தேஹவிளக்கங்கள்


மேற்படி கூட்டங்கள் நடைபெறும் ஸமயத்தில் ஆன்மிகம் ஸம்பந்தமான அனைத்து கேள்விகளையும் கேட்கலாம், இயன்றவரை பதில் தரப்படும், கூட்டம் நடைபெறும் இடங்களில் வைதிகஸ்ரீயின் வெளியீடுகள் (புஸ்தகங்கள்) அனைத்தும் கிடைக்கும், புதிய சந்தா, மற்றும் சந்தா புதுப்பித்தல் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும்.


வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபா , போன் 9884058582

 

நாள்: 10.09.09 வியாழன் முதல் 13.09.09 ஞாயிறு முடிய

இடம்: ஸ்ரீ அமரபாரதி கல்யாண மண்டபம், திருவான்மியூர் சென்னை

நிகழ்ச்சி  வேதபாராயணம், தர்மசாஸ்த்ர உபன்யாஸம் ஆவஹந்தீ ஹோமம்

(வைதிகஸ்ரீ  ஆசிரியரின் ப்ருஹ்மயக்ஞம் ப்ரவசனம் 11.09.09 வெள் மாலை)

 

நாள்: 27.09.09 ஞாயிறு  முதல் 30.09.09 புதன் முடிய

இடம்:  காஞ்சி காமகோடி சங்கர மடம், 11வது கிராஸ், 5ஆவது மெயின் ரோடு,

மஹாஸ்வாமிகள் மார்க், மல்லேஸ்வரம், பெங்களூர் போன்: 09845610390

நிகழ்ச்சி  வேதபாராயணம், தர்மசாஸ்த்ர உபன்யாஸம் ஆவஹந்தீ ஹோமம்

(வைதிகஸ்ரீ  ஆசிரியரின் கிருஹஸ்த தர்மம் ப்ரவசனம் 29.09.09 செவ்  மாலை)


நவராத்திரி அழைப்பிதழ் : எங்களது இல்லத்தில் 190909 முதல் 270909 வரை நடைபெறும் நவராத்ரி சிறப்பு பூஜைக்கும், கொலுவைக் கண்டு களிக்கவும், வைதிகஸ்ரீ வாசகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். அன்னபூரணீ ராஜகோபால கனபாடிகள் புது எண் 488 டி.டி.கே ரோடு ஆழ்வார்பேட்டை சென்னை 600018 போன்  09444257176


சிறப்பான நேரங்கள்

நவராத்ரி கலச ஸ்தாபனம் செய்ய : நவராத்திரிக்காக முதல் நாளன்று (180909) வெள்ளி காலை 10.00  முதல் 10.30 மணிக்குள் பூர நக்ஷத்ரத் தில்குரு ஹோரையில் நவராத்திரி பூஜை (கொலு)க்கு, கலச ஸ்தாபனம் செய்ய,பொம்மைகளை கொலுப் படிகளில் அமைக்க மிகச்சிறந்த நேரம்.

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்ய  பள்ளிக்கு அனுப்ப குழந்தைகளை முதன் முதலில் பள்ளியில் சேர்க்கவும், புதிய பாடம் தொடங்குவதற்கும், விஜயதசமீ மிகச்சிறந்த நன்நாள், 280909  திங்கள் காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் சந்திர ஹோரையில் அல்லது ராஹுகாலம் முடிந்தபின் காலை 10.00 மணி முதல் 10.30 மணிக்குள் ஸூர்ய ஹோரையில் புதிய  கல்வி, கலைகள், கற்றுக் கொள்ள ஆரம்பிக்க குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று பள்ளியில்  சேர்க்க மிகச்சிறந்த நேரம்.

புதிய செயல் தொடங்க 28 .09. 09 திங்கள் அலுவலகத்தில் புதிய செயல்களைத் தொடங்க காலை 12.00  மணி  முதல் மதியம் 02.00 மணி வரை புத, சந்திர ஹோரைகளும், மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை குரு ஹோரையும், மாலை 6.00 மணி முதல் 9.00மணி வரையில் சுக்ரன் புதன் சந்திர ஹோரைகளும் சிறந்த நேரம்.


ஸரஸ்வதி பூஜா ஸங்கல்பம் 27.09.09 ஞாயிறு பூஜை நேரம் 08.0010.00 மணி விரோதி நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயநே வர்ஷருதௌ கன்யா மாஸே சுக்ல பக்ஷே நவம்யாம் சுபதிதௌ பானுவாஸர யுக்தாயாம்  பூர்வாஷாடா நக்ஷத்ர பன நாம யோக பாலவ கரண யுக்தாயாம் நவம்யாம் சுபதிதௌ  துர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீ ப்ரஸாத ஸித்யர்த்தம் சதுர்தச வித்யா பாரங்கதத்வ ஸித்யர்த்தம் வர்ஷே வர்ஷே ப்ரயுக்த ஆவயுஜ க்ல நவமீ புண்ய கால ப்ரயுக்த துர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீ பூஜாம் அஹம் கரிஷ்யே.


இந்த ஆண்டு ஜனாதிபதி விருது: உயர்ந்த குலத்தில் உதித்து முறையாக வேதாத்யயனம் சாஸ்த்ராத்யயனம் செய்து   மதுராந்தகம் காலேஜில் நியாய சாஸ்திர அத்யாபகராக பணியாற்றி தற்சமயம்  ஸ்ரீ நரஸிம்ஹப்ரியா பத்திரிக்கை மூலம் தர்மசாஸ்திர விளக்கங்களை எழுதிவரும் மதுராந்தகத்தில் வஸிக்கும் அன்னாதூர் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார்  ஸ்வாமிக்கு இந்த ஆண்டு ஜனாதிபதி விருது கிடைத்துள்ளதை கேட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.: ஆசிரியர்,வைதிகஸ்ரீ:.


கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆராதனை : ஜகத்குரு ஸ்ரீபகவந்நாம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 317வது ஆராதனை மஹோத்ஸவம் 16092009(புச்ச த்வாதசி) அன்று கோவிந்தபுரத்தில் அதிஷ்டானத்தில் நடைபெறுகிறது, இதை முன்னிட்டு 04.09.09 முதல் 11.09.09 முடிய  பரனூர் மஹாத்மா ஸ்ரீ அண்ணா அவர்களின் ஸ்ரீமத் பாகவத ப்ரவசனம் நாமஸங்கீர்த்தனம் ஆகிய நிகழ்ச்சிகளும்நடைபெறுகிறது.போன்:04352470620.


சென்னை ஆழ்வார்பேட்டையில் ஸ்ரீ ஸீதாராம குருகுல வேதபாடசாலையில்  ஒவ்வொரு ஞாயிறன்றும் காலையில்  ஸூர்ய நமஸ்காரம் நடைபெறுகிறது .ஆஸ்திகர்களும் கலந்து கொள்ளலாம் மேலும் வேத பாடசாலை விபரங்களுக்கு

Back