Let us Vedic priest Enter Your Home Every Month

Vaithikasri October 2009  
 News

தீபாவளீ நிர்ணய வித்வத் ஸதஸ்

பொதுவாக தீபாவளி ஐப்பசி மாதத்தில்தானே வரும்?இந்த வருஷம் மட்டும் புரட்டாசி மாதத்தில் வருகிறதே?என்று ஸந்தேஹம் தோன்றுவது இயல்புதான், புரட்டாசியா? ஐப்பசியா? என்பது முக்கியமல்ல , ஆவயுஜ மாஸத்தில் தீபாவளி என்பதே முக்கியம், அதாவது புரட்டாசி மாத அமாவாஸைக்குப்பின் வரும் ஆஸ்வயுஜ மாத அமாவாஸையன்று தீபாவளி, இது சில வருஷங்களில் புரட்டாசியிலும் வரலாம், சில வருஷம் ஐப்பசி மாதத்திலும் வரலாம்.

இந்த விரோதி வருஷத்தில் புரட்டாசி கடைசி நாளன்று அதாவது ஐப்பசி மாதம் பிறப்பதற்கு முன்பாக வருகிறது. இது ஸரிதானா? அல்லது அடுத்த (ஐப்பசி) மாதத்தில் தீபாவளியா? என்று வித்வான்களுக்கு ஸந்தேஹம் தோன்றியது,   அஹோபில மடம் சார்பாக வெளிவரும் ஸ்ரீ நரஸிம்ஹ ப்ரியா பத்திரிக்கை மூலம் இந்த ஸந்தேஹத்தை எழுதி வித்வான்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டிருந்தார்கள்.

எப்போதுமே வித்வான்களுக்கும் ஆஸ்திக ஜனங்களுக்கும் பாலமாக இருக்கும் வைதிகஸ்ரீ இந்த விஷயத்திலும் வித்வான்கள் அனைவரையும் ஓரிடத்தில் சேரச் செய்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஓர் வித்வத் ஸதஸ்ஸை  31082009 அன்று ஏற்பாடு செய்தது. இதில் கீழ்கண்ட வித்வான்கள் கலந்து கொண்டார்கள்

1.உ.வே.பழவேரி சடகோபாச்சாரியார்  ஸ்ரீகார்யம் அஹோபிலமடம்

2.உ.வே.வில்லிவலம் லக்ஷ்மீநரசிம்ஹாச்சாரியார் ஆசிரியர் ந்ருஸிம்ஹப்ரியா

3.உ.வே. நாட்டேரி ராஜகோபாலாச்சாரியார் ஆசிரியர் ஸ்ரீரங்கநாதபாதுகா

4. ஸ்ரீ  இ. பாலசுப்ரமணிய சாஸ்திரிகள் மீமாம்ஸக வித்வான்

5.ஸ்ரீ ஆர் க்ருஷ்ணமூர்த்திசாஸ்திரிகள்முன்னாள்முதல்வர் ஸம்ஸ்க்ருத கல்லூரி

6. ஸ்ரீ சேங்காலிபுரம் கே. ஸுப்பிரமணிய தீக்ஷிதர் (ஸோமயாஜீ)

7. ஸ்ரீ வடகுடி என். ராமதீக்ஷிதர் (ஸோமயாஜீ)

8. ஸ்ரீ சேங்காலிபுரம் ஆர். ஸுந்தரராம தீக்ஷிதர் (வாஜபேயயாஜீ)

9. ஸ்ரீ நன்னிலம் வி. ராஜகோபால கனபாடிகள் (ஆசிரியர் வைதிகஸ்ரீ:)

10 உ.வே. எஸ். வேணுகோபால ச்ரௌதிகள் (ச்ரௌத பரிபாலன ட்ரஸ்ட்)

11 உ.வே. வி.ப. பார்த்தசாரதி ஸ்வாமிகள்  (ச்ரௌத பரிபாலன ட்ரஸ்ட்)

இந்த ஸதஸ்ஸில் 28ம் நெ வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீ மடம் த்ருக்கணித பஞ்சாங்கம், ஆற்காடு பஞ்சாங்கம் போன்ற  பஞ்சாங்கங்களை கணித்து வெளியிடும் அன்பர்களும் வந்திருந்து தங்கள் கருத்துக்களை கூறினார்கள் வைதிகஸ்ரீ சார்பாக அனைத்து வித்வான்களும் தலா ரூ 1000 ஸம்பாவனையும் பஞ்சாங்க கணனக்காரர்கள் தலா ரூ 500 ஸம்பாவனையும் அளித்து கௌரவிக்கப்பட்டார்கள், ச்ரௌத வித்யா பரிபாலன ட்ரஸ்ட் சார்பாக அனைவரும் சால்வை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.

*நரஸிம்ஹப்ரியா(ஆக09) பத்திரிக்கையில் மஹான் ஒருவரால் 1963 ல் செய்த தீபாவளி நிர்ணயம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஸம்ஸ்க்ருத ச்லோகத்தில் உள்ள விஷயங்களுக்கு தமிழ் மொழி பெயர்ப்பில்  வித்யாஸம் காணப் படுகிறது,

* 1963ம் வருடம் இரண்டு (அதிக) மாதங்களும், ஒரு க்ஷயமாதமும், வந்தது, இந்த வருடமோ அதிக மாதம் இல்லை, ஆகவே 1963ம் வருட நிர்ணயம் இந்த வருஷத்துக்குப்பொருந்தாது,

* துலா ஸம்ஸ்தே  ஸஹஸ்ராம்சௌ  (ஐப்பசி மாதத்தில் ஸூர்யன் இருக்கும்பொழுது தீவட்டியைக் கையில் வைத்துக்கொண்டு பித்ருக்களுக்கு வழிகாட்டவேண்டும்) என்னும் ச்லோகத்திற்கும் தீபாவளியன்று செய்யும் நரக சதுர்தசீ ஸ்நானத்திற்கும் ஸம்பந்தமோ அங்காங்கி பாவமோ இல்லை,

*ஸ்வாதியில் ஸூர்யன் சந்திரன் இருக்கும்பொழுதுஎன்னும் வசனங்கள் ஏதாவது ஒரு ஸமயம்தான்  சேரும்.

* மேலும் துலா ஸ்நானம் உஷாப்யங்கம் க்ருத்திகா தீபமேவ ச ஸௌரமானேண கர்தவ்யம் சாந்திரமாணே ந காரயேத் என்னும் இந்த வாக்ய த்தில்  ஸௌர மானத்தில் செய் என்ற சொன்னபிறகு சாந்த்ரமானத்தில் செய் என்னும் வாதம் பொருந்தவில்லை இந்த வசனம் ப்ரஸித்த ஸ்ம்ருதிகளில் இல்லை.

* 1885, 1924, 1944 வது வருடங்களிலும் இதே போல் ஸம்பவித்து புரட்டாசி மாதத்திலேயே தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது . ஆகவே இந்த விரோதி வருஷம் 171009 அன்று தீபாவளியைக்கொண்டாடுவதில் தவறேதுமில்லை என்பது பலரின் அபிப்ராயமாக இருந்தது, வைதிகஸ்ரீ ஆசிரியர் வித்வான்கள் மத்தியில் இதுபோன்ற விஷயங்களில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்று கூறி அனைவருக்கும் க்ருதக்ஞதையைத்தெரிவித்துக்கொண்டார்.


வைதிகஸ்ரீ: புது எண் 488 டி.டி.கே ரோடு, சென்னை.18

ஆன்மீக விளக்கக்கூட்டங்கள்  (134,135,136,137,138,139ஆவது)

(134) நாள்: 04-10-09 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.00 மணிவரை:

இடம்:  ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் ஆலயம், பெஸன்ட்நகர்,

பொருள்:  வேத தர்மம் ஸந்தேஹ விளக்கங்கள் போன்: 24910405


(135) நாள்: 11-10-09 ஞாயிறு மாலை 4.00 முதல் 5.00 மணிவரை

இடம்:  வேணுகோபாலஸ்வாமி ஆலயம், கோபாலபுரம்.போன் :9382643958

பொருள்: பகவத் கீதை (அத் 1) மற்றும்ஆன்மீகஸந்தேஹ  விளக்கங்கள்


(136) நாள்: 11-10-09 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.30 மணிவரை

இடம்:   ஸ்ரீ சங்கர குருகுலம், அபிராமபுரம். போன் : 9940049726

பொருள்:  மூன்று நாள் தீபாவளி  ஆன்மிக ஸந்தேஹவிளக்கங்கள்


(137)நாள்: 18-10-09 ஞாயிறு மாலை 3.30 முதல் 5.30 மணிவரை

இடம்:  ஸ்ரீ அயோத்யா மண்டபம், மேலமாம்பலம். போன் : 24893077 

பொருள்: வாஸ்து சாஸ்திரம்  ஆன்மிக  ஸந்தேஹ விளக்கங்கள்


(138) நாள்: 25-10-09 ஞாயிறு மாலை 4.00 முதல் 5.30 மணிவரை

இடம்: ஸ்ரீ ஸத்ஸங்கம் தெரு. மடிப்பாக்கம் போன்: 9841276558   22583448

பொருள்: நமதுஸம்ஸ்காரங்கள்உபநயனம் ஸந்தேஹ விளக்கங்கள்


(139)நாள்: 25-10-09 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.30 மணிவரை

இடம்:   அர்த்த நாரீஸ்வரர் ஆலயம், நங்கநல்லூர். போன் : 9444108022

பொருள்: ராகு கேதுப்பெயர்ச்சி பலன்கள் ஆன்மிக ஸந்தேஹ விளக்கம்


மேற்படி கூட்டங்கள் நடைபெறும் ஸமயத்தில் ஆன்மிகம் ஸம்பந்தமான அனைத்து கேள்விகளையும் கேட்கலாம், இயன்றவரை பதில் தரப்படும், கூட்டம் நடைபெறும் இடங்களில் வைதிகஸ்ரீயின் வெளியீடுகள் (புஸ்தகங்கள்) அனைத்தும் கிடைக்கும், புதிய சந்தா, மற்றும் சந்தா புதுப்பித்தல் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும்.


வைதிகஸ்ரீ யின் வைதிக ப்ரகாசம் வேதாத்யயனம் செய்து வைதிக கர்மாக்களை நடத்திவைக்கும் வைதிகர்களின் விபரங்களை வைதிகஸ்ரீ ப்ரகாசம் என்னும் பெயரில் தனி ஒரு புஸ்தகமாக வெளியிட விரும்புவதாக விண்ணப்பித்திருந்தோம், அதன்படி பல வைதிகர்கள் விண்ணப்பம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள், விடுபட்டவர்கள் விரைவாக விண்ணப்பத்தை பெற்று பூர்த்திசெய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். வைதிகஸ்ரீ:

Back