
Vaithikasri February 2008
|
மாக(மாத)ஸ்நாநம் (08.02.08 வெள்ளி முதல் 07.03.08 வெள்ளி முடிய) தை மாத அமாவாஸைக்கு மறுநாள்(080208)முதல், மாசிமாதம் அமாவாஸை (070308) முடிய 30 நாட்களுக்கு மாகமாதம் எனப்பெயர் இந்த 30 நாட்களிலும் தினஸரி அதிகாலையில் பக்கத்தில் உள்ள (காவேரீ போன்ற) நதி, குளம், ஏரி, வீட்டுக்கிணறு, முதலியவற்றிலோ, அல்லது தினஸரி ஸ்னானம் செய்யும் இடத்திலோ, முறையாக கீழ்கண்ட ச்லோகங்களைச் சொல்லி ஸ்னானம் செய்ய (தலை முழுவதும் நனையுமாறு குளிக்க) வேண்டும். இதுவே மாகஸ்னானம் எனப்படும், இவ்வாறு ஒரு மாதம் முழுவதும் (30நாட்களும்) செய்ய இயலாவிட்டாலும் ஸௌகர்யமான ஓர், இரு, நாட்களிலாவது செய்ய முயற்சிக்கலாம். அதிகாலையில் எழுந்திருக்க இயலாவிட்டாலும் கூட ஸூர்ய உதயம் ஆனபிறகும் கூட (ஸந்த்யாவந்தனம் செய்து விட்டு) செய்யலாம். மாக ஸ்னானத்தால் அனைத்து பாபங்களும் விலகி இவ்வுலகிலும் மேலுலகிலும் நன்மையை அடையலாம். ஸங்கல்பம்: .. நக்ஷத்ரே ராள ஜாதஸ்ய (ஜாதாயா:) மம ஸமஸ்த து3ரித க்ஷயார்த்த2ம் மகரஸ்தே2 ரவௌ மாக3மாஸ புண்யகாலே அஸ்மின் போ4த3கே மாக4 ஸ்னானமஹம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் சொல்லிக்கொண்டு ஸ்னானம் செய்யுமிடத்தில் கிழக்குதிசை நோக்கி நின்றுகொண்டு கீழ்கண்ட ஸ்லோகங்களைச்சொல்லி ஸ்ரீ மஹாவிஷ்ணுவை பிரார்தித்துக்கொண்டு மௌனமாக ஸ்னானம் செய்ய வேண்டும். 1.மாக4மாஸே ரடந்த்யாப: கிஞ்சித3ப்4யுதி3தே ரவௌ ப்ரஹ்மக்4நம் வா ஸுராபம் வா கம் பதந்தம் புநீமஹே 2.மகரஸ்தே2 ரவௌ மாகே4 கோ3விந்தா3ச்யுத மாத4வ ஸ்நாநேநா(அ)நேந மே தே3வ யதோ2க்த ப2லதோ3 ப4வ 3. க்ருஷ்ணா(அ)ச்யுத நிமஜ்ஜாமி ப்ரபா4தே(அ)ஸ்மின் போ4த3கே அநேந மாக4 ஸ்நாநேந ஸுப்ரீதோ மாம் ஸமுத்3த4ர 4.து:க்க2 தா3ரித்ர்ய நாய ஸ்ரீவிஷ்ணோஸ் தோஷணாய ச ப்ராத: ஸ்நாநம் கரோம்யத்3ய மாகே4 பாப விநாநம் என்று ச்லோகம் சொல்லி முறையாக ஸ்னானம் செய்து விட்டு வஸ்திரம் கட்டிக் கொண்டு அத்3ய க்ருத மாக4 ஸ்னானா(அ)ங்க3ம் அர்க்4ய ப்ரதா3னம் கரிஷ்யே' என்று ஸங்கல்பம் செய்து கொண்டு, நின்று கொண்டு (ஸ்னானம் செய்த இடத்திலிருந்து) இரண்டு கை நிறைய ஜலம் எடுத்து, கீழ்க்கண்ட ச்லோகம் சொல்லி 3அர்க்யம் விட வேண்டும். தபஸ்யர்க்கோத3யே நத்3யாம் ஸ்நாத்வா(அ)ஹம் விதி4 பூர்வகம் மாத4வாய த3தா3மீத3 மர்க்4யம் த4ர்மார்த்த2 ஸித்3தி4த3ம், மாத4வாயநம: இத3 மர்க்4யம் இத3 மர்க்4யம் இத3 மர்க்4யம் ஸவித்ரே ப்ரஸவித்ரே ச பரம் தா4ம்நே நமோஸ்துதே, த்வத் தேஜஸா பரிப்4ரஷ்டம் பாபம் யாது ஸஹஸ்ரதா4 ஸவித்ரே நம: இத 3மர்க்4யம் இத3 மர்க்4யம் இத3 மர்க்4யம் கங்கா யமுநயோர் மத்4யே யத்ர கு3ப்தா ஸரஸ்வதீ த்ரைலோக்ய வந்திதே தே3வி த்ரிவேண்யர்க்4யம் த3தா3மி தே த்ரிவேண்யை நம: இத3 மர்க்4யம் இத3 மர்க்4யம் இத3 மர்க்4யம் அனேன அர்க்4யப்ரதா3னேன மாத4வாத3ய: ப்ரீயந்தாம் என்று அர்க்யம் கொடுத்து விட்டு ஸூர்யனை நோக்கி நின்று கொண்டு தி3வாகர ஜகந்நாத2 ப்ரபா4கர நமோஸ்து தே பரிபூர்ணம் குருஷ்வேத3ம் மாக4 ஸ்னானம் மயா க்ருதம் என்று ஸூர்யனை நோக்கி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். பிறகு சக்திக்குத் தக்கவாறு ஸ்னானத்துக்கு அங்கமாக (நதிக்கரையில் இருக்கும்) ஏழைகளுக்கு தக்ஷிணை முதலியவற்றைத் தர வேண்டும். பா3லாஸ் ச தருணா: வ்ருத்3தா4: நர நாரீ நபும்ஸகா: ஸ்நாத்வா மாகே4 பே4 தீர்த்தே2 ப்ராப்நுவந்தி ஈப்ஸிதம் ப2லம் சிறுவர்கள், வாலிபர்கள், முதியோர்கள், ஆண்கள், பெண்கள் ஆகிய அனைவரும் மாக மாஸத்தில் த்தமான ஜலத்தில் முறையாக இவ்வாறு ஸ்னாநம் செய்வதால் விரும்பும் பொருளை (பலனை) அடைவார்கள் என்கிற இந்த வாக்யப்படி அனைத்து நன்மைகளையும் மாக ஸ்னானத்தால் பெற முயற்சிக்கலாம்.
|