Let us Vedic priest Enter Your Home Every Month

Vaithikasri June 2009 செய்திகள News

ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் ஜயந்தி - ஆன்மிக விளக்கக்கூட்டம்

நாள் 07.06.09 ஞாயிறு நேரம் மாலை 03.00 மணி

இடம் : பாஸ்டன் மெட்ரிகுலேஷன் ஹயர் செகண்ட்ரி ஸ்கூல்

புது நெ. 534 டி.டி.கே ரோட,ஆழ்வார்பேட்டை சென்னை 600018 போன் 24353706

 Boston matriculation Hr Sec School New No 534, T.T.K. Road, Alwarpet, Chennai - 18. Ph : 24353706.

(opposite to Indian overseas bank sriramnagar alwarpet branch)

 அருளாசி வழங்குபவர்

பூஜ்யஸ்ரீ குருஜி முரளீதர ஸ்வாமிகள் அவர்கள்:

தொடர்ந்து  மஹான்களின் ப்ரவசனம் ஸ்ரீ ருத்ர கனபாராயணம்
 முதலான  நிகழ்ச்சிகளும் நடைபெறும்
, அனைவரும்வருக!! அருளாசி பெருக!!

வைதிகஸ்ரீயின் 115, வது ஆன்மீக விளக்கக்கூட்டம்

நாள்: 03-05-0 9 ஞாயிறு மாலை 6.30 முதல் 08.00 மணிவரை:

இடம்:  ஸ்ரீ ரத்ன கிரீஸ்வரர் ஆலயம், பெஸன்ட்நகர். போன்: 24910405

பொருள்: காஞ்சி மஹாஸ்வாமிகளும் வேதமும் ஆன்மீகஸந்தேஹ விளக்கங்கள்.  ஆன்மீகஸந்தேஹ விளக்கங்கள்.


 

 வைதிகஸ்ரீயின் 116, வது ஆன்மீக விளக்கக்கூட்டம்

நாள்: 17-05-09 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவரை
இடம்:  ஸ்ரீ அயோத்யா மண்டபம், மேலமாம்பலம். போன் : 24893077 
பொருள்:  பஞ்ச மஹா யக்ஞங்கள்
- ஸந்தேஹ விளக்கங்கள்


 

வைதிகஸ்ரீயின் 117 வது ஆன்மீக விளக்கக்கூட்டம்

நாள்: 10-05-09 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவரை

இடம்:   வேணு கோபால ஸ்வாமி ஆலயம், கோபாலபுரம். போன் :9382643958

பொருள்: அஸ்வத்த வ்ருக்ஷ(அரச மர) வழிபாடு ஸந்தேஹ விளக்கங்கள்


வைதிகஸ்ரீயின் 118 வது ஆன்மீக விளக்கக்கூட்டம்

நாள்: 26-4-9 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவரை

இடம்:  அர்த்த நாரீஸ்வரர் ஆலயம், நங்கநல்லூர். போன் : 9444108022

பொருள்:   ஔபாஸன ஹோமம்ஆன்மீக ஸந்தேஹ விளக்கங்கள்


 வைதிகஸ்ரீயின் ஆன்மீக விளக்கக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் வைதிகஸ்ரீயின் அனைத்து புஸ்தகங்களும் கிடைக்கும், புதியஸந்தாவும் ஸந்தா புதுப்பித்தலும் ஏற்றுக்கொள்ளப்படும்.


ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் ஜயந்தி சாஸ்திர ஸதஸ்

காஞ்சி ஸ்ரீமஹாஸ்வாமிகளின் ஜயந்தியை முன்னிட்டு தொடர்ந்து  25ஆம் ஆண்டாக 04.06.2009 முதல் 07.06.2009 முடிய காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில் ஸ்ரீஆசார்யாளின் ஆக்ஞையின் பேரில் வேத சாஸ்திர வாக்யார்த்த சதஸ் ஸ்ரீ கே.எஸ். ஸ்ரீனிவாஸன் அவர்களால் பொதுமக்களின் ஆதரவோடு நடத்தப் படுகிறது. விபரங்களுக்கு கே.எஸ்.ஸ்ரீனிவாஸன். 56/58 தும்பயனம் தெரு, காஞ்சிபுரம். போன்: 04464604679  9884880490.


ஸ்ரீ ஆலங்குடி ஸ்வாமிகள் ஆராதனை

ஆலங்குடி கிராமத்தில் அவதரித்து வேத சாஸ்திரங்கள் கற்று  உலக வாழ்க்கையில்  வைராக்யம் உண்டாகி ஸந்யாஸம் பெற்று ஸ்ரீ பாகவத ப்ரவசனம் செய்து கொண்டு ஸஞ்சரித்து வந்த ஸ்ரீ ஆலங்குடி பெரியவாள் முடிகொண்டான் கிராமத்தில் யுவ வருடம் வைகாசி சுக்லபக்ஷ சதுர்த்தசியில் (17.05.1935) ஸித்தி அடைந்தார், ஸ்ரீ ஸ்வாமிகளின் 74வது வருஷ ஆராதனை ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹத்துடன் ஸ்ரீ ஆலங்குடி ஸ்வாமிகள் ஆராதனா ஸபா ட்ரஸ்ட் மூலம்300509முதல்060609 வரை நடத்தப்படுகிறது, விபரங்களுக்கு , எஸ். சங்கரநாராயணன், 04366230633. ஸுந்தரம் 04424742443.


ஸ்ரீ மன்னார்குடி பெரியவாள் ஜயந்தி

அத்வைத ஸபையை ஆரம்பித்து வைத்தவர் அப்பய்ய தீக்ஷிதர் வம்சத்தில் கூத்தம்பாடி கிராமத்தில் 28.05.1815ல் பிறந்தவர். குலபதி என்று புகழக்கூடிய வகையில் ஏராளமான சிஷ்யர்களை உடையவர் ஆகிய பெருமைகளைப் பெற்ற ஸ்ரீ மன்னார்குடி பெரியவாளின் 194ம் வருஷ ஜயந்தி மஹோத்ஸவம் அவர் வஸித்த மன்னார்குடி க்ருஹத்தில் (ஸ்ரீ சங்கர மடத்தில்) 12.06.2009 அன்று ஆவஹந்தீ ஹோமம், வேதபாராயணம், வாக்யார்த்தம், உபன்யாஸங்களுடன் நடைபெறுகிறது, விபரங்களுக்கு எஸ்.வி. ஜயராமன் , போன்: 04424892132.


அக்னிஹோத்ரி ஆசார்யரானார்

உயர்ந்த ச்ரோத்ரிய வம்சத்தில் பிறந்து வேதம் சாஸ்திரம் ஆசாரம் பகவத் பக்தி முதலிய உயர்ந்த குணங்களுடன் பல வருடங்களாக அக்னிஹோத்ரம் செய்து கொண்டு குடந்தையில் வஸித்த மஹான் (பூர்வாசிரமப்பெயர் ஸ்ரீ ரங்கராஜ கனபாடிகள்) கடந்த 080509 அன்று முறையாகஸ்ரீ ஸ்ரீ அஹோபிலமடத்தின் 46ஆவது அழகியசிங்கராக (பீடாதிபதியாக)  (ஸன்யாஸ) ஆச்ரம ஸ்வீகாரம் கொண்டார். வைதிகஸ்ரீ அன்னாருக்கு அனந்த கோடி வந்தனங்களை ஸமர்பிக்கிறது.


மறைந்தார் ச்ரௌதவித்யா நிதி

ச்ரோத்ரிய வம்சத்தில் பிறந்து தனது தந்தை ஸ்ரீ ராமனாத ச்ரௌதிகள் மூலம்  வேதம் ச்ரௌதவித்யையை ஆகியவைகளை பூர்ணமாகக்கற்றுணர்ந்து தானும் வாஜபேயம் முதலான யக்ஞங்களைச்செய்து (வைதிகஸ்ரீ ஆசிரியர் உட்பட) பற்பல சிஷ்யர்களுக்கும் ச்ரௌத வித்யையை கற்றுத்தந்து நூற்றுக் கணக்கான யாகங்களை நடத்திவைத்த நல்லிச்சேரி ப்ருஹ்மஸ்ரீ யக்ஞேஸ்வர ச்ரௌதிகள் 13042009 அன்று கும்பகோணத்தில் தனது க்ருஹத்தில் ஸ்ரீ யக்ஞேஸ்வரருடன் ஒன்றினைந்தார். அன்னாரின் மறைவு அக்னிஹோத்ரிகளுக்கும்  ஆஸ்திகர் களுக்கும் வைதிகஸ்ரீக்கும் பெரும் இழப்பாகும்.


ஸ்ரீஸீதாராம குருகுலம் (டிரஸ்ட்) வேதபாடசாலை

புது எண் 486 (பழைய எண் 176) டி.டி.கே ரோட்,ஆழ்வார்பேட்டை சென்னை 600018 போன் 65181973. ஸ்ரீஆசார்யாளின் அனுக்ரஹத்தின் பேரில் கடந்த எட்டு வருடங்களாக சென்னையில்ப்ரும்ஹஸ்ரீ ராஜகோபால கனபாடிகளின் க்ருஹத்தில் குருகுல முறையில் நடத்தப்படும் வேதபாடசாலையில் எட்டு வருடம் க்ருஷ்ணயஜுர் வேதம் படித்து பூர்த்தி செய்த  ஸ்ரீஆர்.ஸ்ரீக்ருஷ்ணன், ஸ்ரீ என்.ஸ்தானு ஸுப்ரமணியன் (மணிகண்டன்) ஸ்ரீஎம்.எஸ்.கார்த்திக் (க்ருஷ்ணஸ்வாமி),  ஆகிய மூன்று மாணவர்களும் வி.ஆர்.என்.டி .மூலம் நடைபெற்ற யஜுர்வேத கிரமாந்த பரீக்ஷையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள்,  விஜயதசமி நாளன்று காஞ்சிபுரத்தில் ஸ்ரீசங்கரமடத்தில் ஸ்ரீ ஆசார்யார்கள் மூலம் ஸம்பாவனையும், ஸர்டிபிகேட்டும் பெற்றார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்தற்சமயம் ஸுமார் 12 முதல் 15 வித்யார்த்திகள் வரை வேதம், வேதபாஷ்யம், சாஸ்திரம் படித்து வரும் இந்த வேத பாடசாலை முறையாகப்பதிவுசெய்யப்பட்டு 12 ஏ சான்றிதழையும், 80ஜி, வருமான விலக்குச் சான்றிதழையும் பெற்றுள்ளது.


சென்னை ஆழ்வார்பேட்டையில் ஷ்ரீ ஸீதாராம குருகுல வேதபாடசாலையில்  ஒவ்வொரு ஞாயிறன்றும் காலையில்  ஸூர்ய நமஸ்காரம் நடைபெறுகிறது .ஆஸ்திகர்களும் கலந்து கொள்ளலாம்


கிரந்த எழுத்தில்இலவஸப்ரயோக புஸ்தகங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கிரந்த எழுத்தில் வெளியிடப்பட்ட க்ருஷ்ண யஜுர்வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ர பூர்வ ப்ரயோகம் மற்றும் ச்ராத்த ப்ரயோக புஸ்தகங்களை மறு பதிப்பாக வெளியிட்டு வைதிகர்களுக்கு இலவஸமாக அளித்து வருகிறார் ப்ருஹ்மஸ்ரீ என்.ஜானகிராம சாஸ்திரிகள், இலவஸ புஸ்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்: புது எண் 22, ஸ்கூல் வ்யூ ரோடு 2ஆவது சந்து,ஆர்.ஏ.புரம்.சென்னை.28 போன் 04424953144.


வைதிகஸ்ரீ அலுவலகத்துக்கு போன் செய்பவர்கள் அலுவலக நேரத்தில் (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிக் குள்) போன் (044 24361210) செய்யவும். தர்ம சாஸ்திர விளக்கங்களுக்கு கனபாடிகளை ஸெல்போன் மூலம் தொடர்பு கொள்ளவும்.

Back

Veda darma sastra Paripalana sabha  Pravachanam
By
Rajagopala Ganapatigal
27-06-09 7.00 to 8.30pm Sanakaralayam}
Meenakshi Street
Perambur
Chennai 600011