Let us Vedic priest Enter Your Home Every Month

VAITHIKASRI July 2009 Solar Eclipse

ஸூர்ய கிரஹணம் 22-07-2009 புதன்

ஆடிமாத அமாவாஸையான இன்று காலை கேது கிரஸ்தமாக (கேதுவால் மறைக்கப்பட்டதாக) ஸூர்யகிரஹணம் நிகழ்கிறது. இந்திய ஸ்டாண்டர்டு மணிப்படி  இன்று காலை ஸுமார் 05.28 மணிக்குத் துவங்கும் இந்த ஸூர்ய கிரஹணம் காலைஸுமார்07.12மணிக்கு முடிவடைகிறது. ச் அமாவாஸை தர்ப்பணம் முதல் நாள் (210709 செவ்) செய்து விட்டதால் இன்று கிரஹண தர்ப்பணம் மட்டும் செய்ய வேண்டும்


 நேற்று (210709) மாலைக்குப்பின்  (குழந்தைகள்முதியவர்கள்நோயாளிகள் ஆகியோர் இரவு 09.00 மணிக்கு மேல்) இன்று (220709) காலை ஸூர்ய கிரஹணம் முடியும் வரை எதுவும் சாப்பிடக்கூடாது.


காலை மணி 5.28க்கே கிரஹணம் ஆரம்பித்தாலும் கூட ஸூர்யோதயத்துக்கு பின்புதான் கிரஹண புண்யகாலம் என்பதால் ஸூர்யோதயமாகும் (மணி5.55) நேரத்துக்குப்பிறகு (ஸூர்யோதய நேரம் ஊருக்குத் தக்கவாறு மாறும்) கிரஹணம் பிடித்த ஸ்னானம் தர்ப்பணம் முதலானவற்றைச் செய்ய வேண்டும்.


காலை ஸுமார் 5.30 மணிக்கு (பிடித்த ஸ்நானம் செய்யும் முன்பாக) காலையில் செய்ய வேண்டிய ஸந்த்யாவந்தனத்தைச்செய்து விட வேண்டும்,


ஸூர்யோதயமான உடன்  (காலை05.58 மணிக்கு மேல்) ஸமுத்திரம் குளம், ஏரி, நதி ,கிணறு அல்லது  வீட்டில், ஸௌகர்யப்படி  ஸூர்யோபராக புண்யகாலே ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் உபராக ஸ்பர் ஸ்னானம் அஹம் கரிஷ்யே என்று தம்பதிகளாக  ஸங்கல்பம் செய்து கொண்டு கிரஹண ஸ்பர்ச (பிடித்த) ஸ்நானத்தைச் செய்ய வேண்டும், ச் ஸ்னானம் செய்த பிறகு காலை 05.58 மணி முதல் மத்ய காலமான  ஸுமார் 0620 மணிக்குள் கிரஹணத்தில் செய்ய வேண்டிய பித்ரு தர்ப்பணத்தை அமாவாஸை தர்ப்பணம் போல் (ஸங்கல்பம் மட்டும் மாறும்) செய்ய  வேண்டும்


தர்ப்பணம் செய்ய வேண்டியவர்கள் தர்பணம் செய்த பிறகும், மற்றவர்கள் பிடித்த ஸ்னானம் செய்த பின்பும், அவரவருக்கு உபதேசமான காயத்ரீ முதலான மந்திரங்களை இயன்றவரை கிரஹணம் முடியும் வரை ஜபம் செய்யலாம், வேதாத்யயனம் செய்தவர்கள் புருஷ ஸூக்தம் போன்ற வேதமந்திரங்களைச் சொல்லலாம். ஸ்தோத்ரங்கள் தெரிந்தவர்கள் ஸ்தோத்ரம் சொல்லலாம்.


கிரஹணம் முழுமையாக முடிவடைந்த பின்பு காலை ஸுமார் 7.12 மணிக்குப்பிறகு முன்போல் உபராக புண்யகாலே மோக்ஷ ஸ்நானமஹம் கரிஷ்யே என்று ஸங்கல்பித்து ஸ்னானம் செய்ய வேண்டும்.


கிரஹண காலத்தில் அனைவரும் ஸ்வர்ணம் (தங்கம்) வெள்ளி கம்பளி கொள்ளு கோதுமை போன்றவற்றை தானம் செய்யலாம்.


இன்று(220709)  செய்ய வேண்டிய பிரதமை திதி ச்ராத்தத்தை கிரஹணம் விட்ட பிறகு புண்யாஹவாசனம் செய்து சுத்தி செய்து விட்டு இன்றே  செய்ய வேண்டும்.


கிரஹண தோஷ பரிஹார ச்லோகம்

இந்த்3ரோ(அ)நலோ த3ண்டத4ரச ருக்ஷ: பாசாயுதோ4 வாயு குபே3ர ஈ:--

குர்வந்து ஸர்வே மம ஜன்மர்க்ஷ- ராஸ்த்த2 ஸூர்ய க்3ரஹ தோ3ஷ சாந்திம்

க்ரஹணம் நிகழும் நேரத்தில் மேலே இருக்கும் கிரஹண பரிஹார லோகத்தை ஓர்புதிய துணியிலோ, பனைஓலையிலோ, குங்குமம் அல்லது பேனாவினால் எழுதி,தனதுஉடலில் அந்தத்துணிஅல்லது ஓலைபடுமாறுதலையிலோ இடுப்பிலோ  கையிலோ கட்டிக்கொண்டு மந்திரத்தை மூன்று முறையாவது  சொல்ல வேண்டும். 


க்ரஹணம் முடிந்தபிறகு  முறையாக ஸ்னானம் செய்துவிட்டு, இந்தத் துணியை (ஓலையை) நெல் அல்லது கோதுமையுடன்  முழு (மட்டையுடன் கூடிய) தேங்காய்  (ஸ்வர்ணத்தையும்) சேர்த்து  தக்ஷிணையுடன் 

மமஜன்மர்க்ஷே ஸூர்யோபராக3 ப்ரயுக்த தோ3ஷ பரிஹாரார்த்த2ம் இத3ம்ஹிரண்யம் தா4ன்யம்சஸம்ப்ரத3தே3 என்றுசொல்லி தானம் செய்துவிட வேண்டும்.

16 வயதிற்குள் இருக்கும் (ச்லோகம் சொல்ல சக்தியற்ற) குழந்தைகளின் நக்ஷத்ரத்தில் க்ரஹணம் பிடித்தால் அவர்களுக்காக பெற்றோர் இதைச் செய்யலாம்.


 கிரஹண பரிஹாரம் செய்து கொள்ள வேண்டிய நக்ஷத்ரங்கள்

22072009 புதன் நிகழும் கேது கிரஸ்த ஸூர்ய க்ரஹணத்தின் போது  பரிஹாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்  , புனர்பூசம், பூசம்,ஆயில்யம், அனுஷம், உத்திரட்டாதி நக்ஷத்ரங்களில் பிறந்தவர்கள்


 ஸூர்ய கிரஹண நேரம்

தெரியுமிடம் மும்பை ஆரம்பம் 05.31  மத்யம் 06.22 முடிவு 07.19

தெரியுமிடம் ஹைதராபாத் ஆரம்பம்  05.29  மத்யம் 06.22 முடிவு  07.24

தெரியுமிடம் திருநெல்வே ஆரம்பம் 05.32  மத்யம் 06.21 முடிவு 07.14

தெரியுமிடம் மதுரை ஆரம்பம் 05.31  மத்யம் 06.21 முடிவு 07.15

தெரியுமிடம் திருச்சிஆரம்பம் 05.31  மத்யம் 06.21 முடிவு 07.16

தெரியுமிடம் பாண்டிச்சேரி ஆரம்பம் 05.30  மத்யம் 06.21 முடிவு 07.18

தெரியுமிடம் பெங்களூர் ஆரம்பம் 05.30  மத்யம் 06.21 முடிவு 07.18

தெரியுமிடம் சென்னை ஆரம்பம் 05.32  மத்யம் 06.21 முடிவு 07.19

Back