Let us Vedic priest Enter Your Home Every Month

VAITHIKASRI July 2009 செய்திகள News

வைதிகஸ்ரீயின் 119, வது ஆன்மீக விளக்கக்கூட்டம்

நாள்: 05-07-0 9 ஞாயிறு மாலை 6.30 முதல் 08.00 மணிவரை:

இடம்:  ஸ்ரீ ரத்ன கிரீஸ்வரர் ஆலயம், பெஸன்ட்நகர். போன்: 24910405

பொருள்: நமது சாஸ்திரங்கள் (தர்க்க சாஸ்திரம்) -ஆன்மீக ஸந்தேஹ விளக்கங்கள்


 

 வைதிகஸ்ரீயின் 120, வது ஆன்மீக விளக்கக்கூட்டம்

நாள்: 12-07-09 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவரை
இடம்:  ஸ்ரீ அயோத்யா மண்டபம், மேலமாம்பலம். போன் : 24893077 
பொருள்:  வேதங்களில் வாழ்க்கை முறை
- ஸந்தேஹ விளக்கங்கள்


 

வைதிகஸ்ரீயின் 121 வது ஆன்மீக விளக்கக்கூட்டம்

நாள்: 19-07-09 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவரை

இடம்:   வேணு கோபால ஸ்வாமி ஆலயம், கோபாலபுரம். போன் :9382643958

பொருள்: ஸூர்ய கிரஹணம் ஸந்தேஹ விளக்கங்கள்


வைதிகஸ்ரீயின் 122 வது ஆன்மீக விளக்கக்கூட்டம்

நாள்: 26-07-09 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவரை

இடம்:  அர்த்த நாரீஸ்வரர் ஆலயம், நங்கநல்லூர். போன் : 9444108022

பொருள்:   வரலக்ஷ்மி விரதம்உபாகர்மா-ஆன்மீக ஸந்தேஹ விளக்கங்கள்


 வைதிகஸ்ரீயின் ஆன்மீக விளக்கக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் வைதிகஸ்ரீயின் அனைத்து புஸ்தகங்களும் கிடைக்கும், புதியஸந்தாவும் ஸந்தா புதுப்பித்தலும் ஏற்றுக்கொள்ளப்படும்.


ஸ்ரீ ஸீதாராம குருகுலம் வேதபாடசாலை ஆண்டுவிழா

ஸ்ரீ ஸீதாராம குருகுலம் வேதபாடசாலை ஆண்டுவிழா மற்றும் காஞ்சி ஸ்ரீமஹாஸ்வாமிகளின் 116வது ஜயந்திவிழா 07.06.2009 அன்று சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே.ரோடு, பாஸ்டன் பள்ளியில் நடைபெற்றது. ஸூர்ய நமஸ்காரம், ஆவஹந்தீ ஹோமம், ஸ்ரீருத்ர கனபாராயணம் முதலிய  நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குருஜி பூஜ்யஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் வேதபாடசாலைக்கு ஆதரவளிக்கும் ஆஸ்திகர்களுக்கும் ஸீதாராம பட்டாபிஷேக படம் தந்து ஆசி வழங்கி ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் மஹிமைகளை எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸீதாராம குருகுல வேதபாடசாலை மாணவர்கள் தாங்கள் கற்கும் பாடங்களான வேதம், வேத பாஷ்யம், லக்ஷணம், ச்ரௌதம் ஆகியவற்றை சொல்லிக் காண்பித்தார்கள், இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.


இந்த வருடம் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் ஆசார்யர்கள்
070709 முதல் 040909 வரை தங்கியிருக்கும் ஊர்களும் விபரங்களும்

 ச்ருங்கேரி  ஜகத்குரு ஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள்:
ச்ருங்கேரி சாரதாபீடம்
ச்ருங்கேரி. சிக்மகளூர் டிஸ்டிக், கர்நாடகா.. போன்: 08265250123

காஞ்சி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி மஹா ஸ்வாமிகள் மற்றும்
காஞ்சி ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்:
காஞ்சி காமகோடி பீடம்:ஸ்ரீ  சங்கரமடம்
, நெ1, சாலைத்தெரு காஞ்சிபுரம். போன்: 044 27222115,

சகடபுரம் ஜகத்குரு ஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த ஸ்வாமிகள்:
ஸ்ரீகாஞ்சி சங்கரா பப்ளிக் ஸ்கூல்
Gota Chokdi.Oghaj Road. S.G.Highway, Ahamadabad -
pin code 382 481.
Ph: 26464786 / 09328087757.

ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்வாமிகள்:
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவ்ன் ஆச்ரமம் ஸ்ரீவெங்கடேஸ்வரா ஸந்நிதி
, ஸ்ரீபுரம் முதல் க்ராஸ், சேஷாத்ரிபுரம் முதல் மெயின் ரோடு, பெங்களூர்  560002. போன்: 080 22316612, 23443859.

அஹோபில மடம் ஜகத்குரு ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகள் மற்றும்
அஹோபில மடம் ஸ்ரீ சின்ன ஜீயர் ஸ்வாமிகள்:
ஸ்ரீஅஹோபிலமடம்
ஸ்ரீமாலோல வேதபவனம் ப்ரகாஷ் நகர்,
பெங்களூர்  560021. போன்: 08023420745 / 23325111

தேனி ஜகத்குரு ஸ்ரீ ஓங்காரனந்தா ஸ்வாமிகள்:
ஸ்வாமி சித்பவானந்தா ஆஸ்ரமம்
, சத்ரபதி சாலை, வேதபுரி, தேனீ 625 531. போன் :04546253908


அக்னிஹோத்ர ஹோமம் செய்யும்  ஆஹிதாக்னிகளின் ஸதஸ்

முறையாக வேதாத்யயனம் , விவாஹம் செய்து கொண்டு, ஔபாஸனத்துடன் வாழ்நாள் முழுவதும் தினஸரி ஸூர்ய உதய அஸ்தமன வேளைகளில் அக்னிஹோத்ரம் என்னும் ஹோமம் செய்பவர்களே ஆஹிதாக்னிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தியா முழுவதும் உள்ள அக்னிஹோத்ரிகள் அனைவரும் ஒன்று சேரும் அக்னிஹோத்ர ஸதஸ்  ப்ரதிவருஷம் போல் இந்த வருஷமும் ஸ்ரீகாஞ்சிகாமகோடி சங்கரமடத்தில் ஸ்ரீஆசார்யர்களின் முன்னிலையில்10.07.09 முதல் 12.07.09 முடிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.


 பஞ்சாங்கதர்ம சாஸ்திர  ஸதஸ் 

பஞ்சாங்க  தர்ம சாஸ்திர  ஸதஸ் பரம்பரையாக பஞ்சாங்கத்தை கணித்து வெளியிடும் பஞ்சாங்கம் கணிப்பவர்கள் மற்றும், விரத பண்டிகை நாட்களை தீர்மானிக்கும் தர்ம சாஸ்திரக்காரர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் பஞ்சாங்கதர்ம சாஸ்திர  ஸதஸ்  ப்ரதிவருஷம் போல் இந்த வருஷமும் ஸ்ரீகாஞ்சிகாமகோடி சங்கரமடத்தில் ஸ்ரீஆசார்யர்களின் முன்னிலையில் 27.07.09 முதல் 29.07.09 முடிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.பஞ்சாங்கம் கணிப்பவர்களுக்கு ஆலோசனை மற்றும் அபிப்ராயங்களைத் தெரிவிக்க விரும்புபவர்கள் காஞ்சி மடத்துக்கோ வைதிகஸ்ரீக்கோ தபால் மூலம் தங்களது கருத்துக்களை  எழுதி அனுப்பி வைக்கலாம்.


வாஸ்து நாள்

27.07.2009  திங்கள்  காலை 07.45 முதல் 08.15 வரை புதியதாக  கட்டடம் கட்டுவதற்கு  ஆரம்பிக்கவும், பூமி பூஜை  செய்யவும் மிகச் சிறந்த நாள்.


ஸ்ரீஸீதாராம குருகுலம் (டிரஸ்ட்) வேதபாடசாலை

புது எண் 486 (பழைய எண் 176) டி.டி.கே ரோட்,ஆழ்வார்பேட்டை சென்னை 600018 போன் 65181973. ஸ்ரீஆசார்யாளின் அனுக்ரஹத்தின் பேரில் கடந்த எட்டு வருடங்களாக சென்னையில்ப்ரும்ஹஸ்ரீ ராஜகோபால கனபாடிகளின் க்ருஹத்தில் குருகுல முறையில் நடத்தப்படும் வேதபாடசாலையில் எட்டு வருடம் க்ருஷ்ணயஜுர் வேதம் படித்து பூர்த்தி செய்த  ஸ்ரீஆர்.ஸ்ரீக்ருஷ்ணன், ஸ்ரீ என்.ஸ்தானு ஸுப்ரமணியன் (மணிகண்டன்) ஸ்ரீஎம்.எஸ்.கார்த்திக் (க்ருஷ்ணஸ்வாமி),  ஆகிய மூன்று மாணவர்களும் வி.ஆர்.என்.டி .மூலம் நடைபெற்ற யஜுர்வேத கிரமாந்த பரீக்ஷையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள்,  விஜயதசமி நாளன்று காஞ்சிபுரத்தில் ஸ்ரீசங்கரமடத்தில் ஸ்ரீ ஆசார்யார்கள் மூலம் ஸம்பாவனையும், ஸர்டிபிகேட்டும் பெற்றார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்தற்சமயம் ஸுமார் 12 முதல் 15 வித்யார்த்திகள் வரை வேதம், வேதபாஷ்யம், சாஸ்திரம் படித்து வரும் இந்த வேத பாடசாலை முறையாகப்பதிவுசெய்யப்பட்டு 12 ஏ சான்றிதழையும், 80ஜி, வருமான விலக்குச் சான்றிதழையும் பெற்றுள்ளது.


சென்னை ஆழ்வார்பேட்டையில் ஷ்ரீ ஸீதாராம குருகுல வேதபாடசாலையில்  ஒவ்வொரு ஞாயிறன்றும் காலையில்  ஸூர்ய நமஸ்காரம் நடைபெறுகிறது .ஆஸ்திகர்களும் கலந்து கொள்ளலாம்


வைதிகஸ்ரீ அலுவலகத்துக்கு போன் செய்பவர்கள் அலுவலக நேரத்தில் (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிக் குள்) போன் (044 24361210) செய்யவும். தர்ம சாஸ்திர விளக்கங்களுக்கு கனபாடிகளை ஸெல்போன் மூலம் தொடர்பு கொள்ளவும்.

Back