Vaithikasri January 2010 E Mail: vaithikasri@yahoo.com
|
ஸூர்ய கிரஹணம் 15.01.10 வெள்ளி அமாவாஸையான இன்று மதியம் ராகு கிரஸ்தமாக (ராகுவால் மறைக்கப் பட்டதாக)ஸூர்யகிரஹணம் நிகழ்கிறது. இந்திய ஸ்டாண்டர்டு மணிப்படி இன்று காலை ஸுமார் 11.24 மணிக்குத் துவங்கும் இந்த ஸூர்ய கிரஹணம் பிற்பகல் ஸுமார் 03.14 மணிக்கு முடிவடைகிறது. இன்று காலை முதல் கிரஹணம் முடியும் வரையில் சாப்பிடக்கூடாது, கிரஹணம் முடிந்த பின்பு (ஸமைத்து) சாப்பிடலாம், இன்று செய்ய வேண்டிய பிரதமை திதி ச்ராத்தத்தை நாளை (160110) அன்று செய்ய வேண்டும். கிரஹண தோஷ பரிஹாரம் இந்த்3ரோ(அ)நலோ த3ண்டத4ரச ருக்ஷ: பாசாயுதோ4 வாயு குபே3ர ஈசா: குர்வந்து ஸர்வே மம ஜன்மர்க்ஷ ராசிஸ்த2 ஸூர்ய க்3ரஹ தோ3ஷ சாந்திம் க்ரஹணம் நிகழும் நேரத்தில் மேலே இருக்கும் சலோகத்தை ஓர்புதிய துணியிலோ, பனைஓலையிலோ, குங்குமம் அல்லது பேனாவினால் எழுதி , தனது உடலில் அந்தத்துணி அல்லது ஓலை படுமாறு தலையிலோ இடுப்பிலோ கையிலோ கட்டிக்கொண்டு மந்திரத்தை மூன்று முறையாவது சொல்ல வேண்டும். க்ரஹணம் முடிந்தபிறகு முறையாக ஸ்னானம் செய்துவிட்டு, இந்தத் துணியை (ஓலையை) நெல் அல்லது கோதுமையுடன் (ஸ்வர்ணத்தையும்)சேர்த்து தக்ஷிணையுடன் மமஜன்மர்க்ஷே ஸூர்யோபராக3 ப்ரயுக்த தோ3ஷ பரிஹாரார்த்த2ம் இத3ம் ஹிரண்யம் தா4ன்யம் ச ஸம்ப்ரத3தே3 என்று சொல்லி தானம் செய்துவிட வேண்டும். 16 வயதுக்குள்ளான குழந்தைக்காக, பெற்றோர் இதைச் செய்யலாம். கிரஹண பரிஹாரம் செய்து கொள்ள வேண்டிய நக்ஷத்ரங்கள் 15-01-2010 வெள்ளி நிகழும் ஸூர்ய க்ரஹணத்தின் போது பரிஹாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்: கார்த்திகை, உத்திரம், ,பூராடம், உத்திராடம், திருவோணம், நக்ஷத்ரங்களில் பிறந்தவர்கள். |