Vaithikasri
January 2010 E Mail:
vaithikasri@yahoo.com

|
சாஸ்திராணி யத்ர
க3ச்சந்தி தத்ர க3ச்சந்தி தே நரா:
அந்த சாஸ்திரங்களை நன்கு உணர்ந்து கொண்ட நமது முன்னோர்களான மஹரிஷிகள் உலகில் ஒவ்வொரு பொருளுடனும் ஒவ்வொரு நிகழ்வுகளுடன் நமக்கு ஏற்படும் தொடர்பை நன்கு கூர்ந்து ஆராய்ந்து அதன்விளைவுகளுக்குத் தக்கபடி நமது நன்மைக்காக விக்ஞான அடிப்படையில் சில வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளார்கள், அவைகளில் ஸூர்ய சந்திர கிரஹணமும் ஒன்று, கிரஹணத்தின் போது நாம் வஸிக்கும் இடத்திலும் நம் உடலிலும் ஏற்படும் சிற்சில மாறுதல் ஏற்படுகிறது, கிரஹணகாலத்தில் உணவுப்பொருள்களில் கிருமிகள் தோன்றுகின்றன, ஆகவே கிரஹண காலத்தில் உணவு தயார் செய்வதும், கிரஹணத்தில் தயார் செய்யப்பட்ட உணவை சாப்பிடுவதும் கூடாது, கிரஹண காலத்தில் நம் வயிற்றில் இருக்கும் உணவு கூட வியாதிக்குக் காரணமாக அமைவதால் கிரஹணகாலத்தில் காலி வயிறாக இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் சில மணி நேரத்துக்கு முன்பே சாப்பிடவேண்டும் என்பது போன்ற பல கட்டுப் பாடுகளை மஹர்ஷிகள் நமக்கு அறிவுறுத்தியுள்ளார்கள், இந்த உண்மையை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்ட அப்பா தாத்தா போன்ற நமது முன்னோர்கள் இந்த சாஸ்திர விதிகளை பல வருஷங்களாக பின்பற்றி வாழ்ந்து பயனடைந்துள்ளார்கள், தற்காலத்தில் நமது மனதையும் பாரம்பரிய மான பழக்க வழக்கங்களையும் மாற்ற (டி.வி.போன்ற ஸாதனங்கள் மூலம்) கலிபுருஷன் முயற்சி செய்கிறான். நாம் அதற்கு இடம் தரக்கூடாது, கிரஹணம் போன்ற நிகழ்வுகளில் நாம் நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டு முன்னோர்களால் செயல்படுத்தப்பட்ட (கிரஹண காலத்தில், ஆரம்பம் மற்றும் முடிவில் குளித்தல் பரிஹாரங்கள் செய்தல்,ஏழைகளுக்கு தானம் செய்தல் தர்ப்பணம் செய்தல், தூக்கம், சாப்பாடு, ப்ரயாணம், வீண்பேச்சு ஆகியவற்றைத் தவிர்த்தல் போன்ற) செயல்களை நாமும் செய்து மஹர்ஷிகளின் ஆசி பெற்று ஆரோக்யமாக வாழ்ந்து நன்மையடையலாம், இதற்கு ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும். |
|
|