Vaithikasri
September 2008
வைதிக ஸ்ரீ:


|
யக்ஞோ தானம் தபஸ்சைவ பாவநாநி மநீஷிணாம் இவ்வுலகில் யக்ஞம் (ஹோமம்), தானம், தவம், என்னும் மூன்றும் மனிதர்களின் அனைத்து பாபங்களையும் போக்கிக் கொள்ள சிறந்த ஸாதனம் என்பது பகவானின் வாக்கு, தற்காலத்தில் ஆங்காங்கே நிறைய தானங்களும் தர்மங்களும் நடைபெறுகின்றன, செல்வந்தர்கள் பொது வான தர்மங்களுக்கு நிறைய வாரி வழங்குகின்றார்கள், நிறைய அடிக்கடி கும்பாபிஷேகங்கள், ஆலயத் திருப்பணி கள், அன்னதானங்கள், ஹோமங்கள், முதலானவைகள் நடைபெறுகின்றன, ஆனாலும் இவ்வாறு தானங்கள் செய்யும்போது முழுமையான பலனையடைய சில நியமங்களை கடைபிடிக்க வேண்டும், அதில்முக்கியமானது செய்த தான தர்மங்களை வெளிப்படுத்தக்கூடாது என்பது, அதாவது நாம் தானங்களையும் தர்மங்களையும் செய்யும் போது,பகவான் நமக்கு தானங்களையும் தர்மங்களையும் செய்வதற்கு சக்தியையும் வஸதிகளையும் தந்திருக்கிறார் என்று கருதி அடக்கத்துடனும் பணிவுடனும் (நம்மால் இவ்வளவு தானே செய்ய முடிகிறது இதற்கு மேலும் செய்ய இயலவில்லையேஎன்று) வெட்கப்பட்டுக்கொண்டும் செய்யவேண்டும் என்கிறது சாஸ்திரம், மேலும் தானங்கள் செய்யும் போது ரஹஸ்யமாகச் செய்யவேண்டும், வெளிப்படையாகச் செய்தாலும் கூட, செய்த தானங்களை தர்மங்களை நான் இன்னாருக்கு இன்ன பொருளை தானம் செய்தேன் ,நான் இன்னென்ன தர்ம காரியங்களைச் செய்திருக்கிறேன் என்று தற்புகழ்ச்சியுடன் மற்றவரிடம் தெரிவிக்கக்கூடாது, தர்ம: க்ஷரதி கீர்த்தனாத் என்று இதனால் செய்த தானத்தின் தர்மத்தின் புண்யங்கள் குறையும் ஏன் அழிந்துவிடும் என்கிறது சாஸ்திரம், இதையே தான் யக்ஞோ(அ)ந்ருதேந க்ஷரதி தப: க்ஷரதி விஸ்மயாத் ஆயுர் விப்ராபவாதே3ந தா3நம் ச பரிகீர்த்தனாத் (மனு ஸ்ம்ருதி 237) பூஜை ஹோமம் பாராயணம் ஆகியவற்றின் நடுவே பொய்சொல்வதால், அவைகளின் பலன் குறைகிறது, நான் இவ்வளவு தவம் செய்து விட்டேன் , என்று ஆஸ்சரியப்படுவதால் தவம் அழிகிறது, வேதம் கற்ற அந்தணர்களை பெரியோர்களை அவமானம் செய்வதால் ஆயுள் குறைகிறது , நான் இவ்வளவு தானம் செய்துள்ளேன் என்று சொல்லிக்கொள்ளுவதால், செய்த தானத்தின் பலன் குறைகின்றது என்கிறார் மஹாத்மா மனு, ஆகவே நாம் செய்யும் தானங்கள், தர்மங்கள், உதவிகள், சிறிதானாலும் கூட அவற்றை சொல்லிக்கொள்ளக்கூடாது, இதனால் தானத்தின் தர்மத்தின் பலன் முழுமையாகக் கிட்டும், இதற்கு பகவான் அனுக்ரஹிக்கட்டும். |
|
|