Let us Vedic priest Enter Your Home Every Month

Vaithikasri December 2009 
E Mail: vaithikasri@yahoo.com
 News

பாலக்காட்டில் ஸுந்தரகாண்ட பிரவசனம் பரசுராம க்ஷேத்ரமாகிய கேரள மாநிலத்தில் பாலக்காடு தத்தமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ தர்ம சாஸ்தா உத்ஸவம் டிரஸ்ட் சார்பாக ஐயப்ப பூஜா உத்ஸவம் விமரிசையாக நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக 141209 முதல் 191209 வரை வைதிகஸ்ரீ ஆசிரியர்  நன்னிலம்  ப்ருஹ்மஸ்ரீ வை.ராஜகோபால கனபாடிகளின் ஸுந்தரகாண்ட பிரவசனம் நடைபெறுகிறது. விபரங்களுக்கு  கே.ஸ்ரீனிவாஸன். போன்:04923227600, 9744577252


 மதுரையில் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பிரவசனம் மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மதனகோபால ஸ்வாமி ஆலயத்தில் 23122009 முதல் 30122009 முடிய வைதிகஸ்ரீ ஆசிரியர்  நன்னிலம்  ப்ருஹ்மஸ்ரீ வை.ராஜகோபால கனபாடிகளின் ப்ரவசனத்துடன் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணம் லக்ஷார்ச்சனை ராதாகல்யாணம் முதலான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன, விபரங்களுக்கு போன்: 9442090073.


 குணசீல க்ஷேத்ரத்தில் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹம் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக ஸ்ரீனிவாஸனாக அருள்பாலிக்கும் திருச்சி அருகில் காவேரீ தீரம் குணசீலம் க்ஷேத்ரத்தில் 251209 முதல் 010110 முடிய சேங்காலிபுரம் ப்ருஹ்மஸ்ரீ கே.ஸுப்ரஹ்மண்ய தீக்ஷிதரின் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹம் விதிவத்தாக மூலபாராயணம்,ராதாகல்யாண நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது, விபரங்களுக்கு எஸ்.ராம்பிரஸாத்: போன் 94440 60535.


கோவிந்தபுரத்தில் அதிருத்ரஸஹஸ்ர சண்டீ யாகம் நாம ஸித்தாந்தம் செய்து முக்தராக ஜீவ ஸமாதியில் அமர்ந்து அருள்பாலிக்கும் தஞ்சைஜில்லா கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டான வளாகத்தில் 151209 முதல் 241209 முடிய அதிருத்ரம் ஸஹஸ்ரசண்டீ மஹாயக்ஞம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கைங்கர்ய டிரஸ்ட் சார்பாக நடைபெறுகிறது. விபரங்களுக்கு எஸ்.ராமகிருஷ்ணன்: போன்: 9442644830.(04312434553).


இருள் நீக்கி கிராமத்தில் வேத ஸம்மேளனம் திருவாரூர் மாவட்டம்  (காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவதரித்த) இருள்நீக்கி கிராமத்தில் ஸ்ரீ சங்கரமடத்தில் 161209 முதல் 201209 முடிய தொடர்ந்து ஏழாம் ஆண்டாக ரிக்,யஜுர்,ஸாம வேதபாராயணங்கள், ஈச்சங்குடி ப்ருஹ்மஸ்ரீ வாஸுதேவ கனபாடிகளின் வேததர்மம் பிரவசனத்துடன் நடைபெறுகிறது,விபரங்களுக்கு எம்.கணேசன் போன்: 9962554397.


வைதிகஸ்ரீ யின் வைதிக ப்ரகாசம் வைதிகஸ்ரீ ப்ரகாச புஸ்தகத்துக்கு பல வைதிகர்கள் விண்ணப்பம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள், இதுவரை விண்ணப்பம் கிடைக்காதவர்கள், ஒரு வெள்ளைத் தாளில் தாங்களின் பெயர், முழு விலாஸம், தந்தைதாயார் மனைவி பெயர், பிறந்த தேதி,கல்வித் தகுதி, பயின்ற பாடசாலை குரு, பெற்ற விருதுகள் , குறிக்கோள் ஆகிய விபரங்களுடன் போட்டோவையும் சேர்த்து வைதிகஸ்ரீக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


வைதிகஸ்ரீயின் வாசகர்கள் தாங்களின் விலாஸ மாறுதல் விவாஹ ப்ராப்தி விபரங்கள் சந்தா செலுத்திய விபரங்கள் ஆகியவற்றை 9444680189 அல்லது 9445215674 ஆகிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ,  வைதிகஸ்ரீ அட் யாஹூ டாட் காம் என்னும் முகவரிக்கு  இ மெயில் மூலமாகவோ 15ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.


கிருத்திகா மண்டல வேதபாராயணம் 17.11.09  முதல் 31.01.10 ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை மார்கழி மாதங்களில் நடைபெறும் கிருத்திகா மண்டல வேத பாராயணங்கள்  ரிக்வேதம் ,யஜுர் வேதம்  ஸாம வேதம் ஆகிய மூன்று வேதங்களிலும் ஒவ்வொரு ஊரிலும் ஏற்பாடாகி நடத்தப் படுகின்றன, 17112009  முதல் தொடர்ந்து ஸுமார் 48 நாட்கள்  தினஸரி மாலையில்  வேதவ்யாஸ பூஜை, ஒரு மணி நேரம் வேதபாராயணம், மந்த்ரார்த்த உபந்யாஸம் என்று நடத்தப்படும் இந்த க்ருத்திகா மண்டல பாராயணத்தை ஜன்ம நக்ஷத்ரத்தன்று ஒரு நாளாவது அவரவர் இல்லத்தில்  நடத்த முயற்சிக்கலாம், பாராயணம் நடத்த விரும்புபவர்கள் அருகிலுள்ள   தங்களது வேதத்தைச்சேர்ந்த  வேதவித்வானையோ  வைதிகஸ்ரீ ஆசிரியரையோ (போன் 94452 15674  938106 1946 ) தொடர்பு கொள்ளலாம்.


ஆன்மீக விளக்கக்கூட்டங்கள் (147,148,149,150,151,152,153ஆவது) 

ஸ்ரீ ஸீதாராம குருகுலம் டிரஸ்ட் (வைதிகஸ்ரீ:)  புது எண் 486 டி.டி.கே ரோடு, சென்னை.18


 (147) நாள்: 06-12-09 ஞாயிறு மாலை 4.00 முதல் 5.30 மணிவரை

இடம்: ஸ்ரீ சங்கர குருகுலம், அபிராமபுரம். போன் : 9940049726

பொருள்: ஸ்ரீ ருத்ர மஹாமந்திர பாஷ்யம்2, மற்றும் ஸந்தேஹ விளக்கம்

**************************

(148) நாள்: 06-12-09 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.00 மணிவரை:

இடம்: ஸ்ரீ ரத்ன கிரீஸ்வரர் ஆலயம், பெஸன்ட்நகர், போன்: 24910405

பொருள்:  வேதமும்  நாதமும் மற்றும் ஆன்மீக ஸந்தேஹ விளக்கங்கள்

 **************************

(149) நாள்: 13-12-09 ஞாயிறு மாலை 3.30 முதல் 4.30 மணிவரை

இடம்:  வேணுகோபால ஸ்வாமி ஆலயம், கோபாலபுரம். போன் :9382643958

பொருள்:  தனுர்மாத பூஜை  காஞ்சி மஹாஸ்வாமிகள் மஹிமை

 **************************

(150) நாள்: 20-12-09 ஞாயிறு மாலை 3.30 முதல் 5.30 மணிவரை

இடம்:  ஸ்ரீ அயோத்யா மண்டபம், மேலமாம்பலம். போன் : 24893077 

பொருள்:  பெற்றோர் இறந்த வருடத்தில் நியமங்கள், ஸந்தேஹ விளக்கம்

 **************************

(151)நாள்: 20-12-09 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.30 மணிவரை

இடம்:   அர்த்த நாரீஸ்வரர் ஆலயம், நங்கநல்லூர். போன் : 9444108022

பொருள்:  குல தைவ வழிபாடும் வழிமுறைகளும்? ஸந்தேஹ விளக்கம்

 **************************

(152) நாள்: 27-12-09 ஞாயிறு  மாலை 4.00 முதல் 5.30 மணிவரை

இடம்:  தாம்பிராஸ் திருமணமண்டபம், நெ 18, ஸுப்பிரமண்ய பிள்ளை தெரு ,

எஸ்.எஸ்.காலனி. மதுரை.16  போன் :045226019204358920.

மாலை 4.00  5.30 மணி சந்திர கிரஹணம் எது செய்யலாம்? எது கூடாது?

மற்றும் ஆன்மிக ஸந்தேஹ விளக்கங்கள்

(நிகழ்ச்சி ஏற்பாடு  தாம்ப்ராஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கோவை)

 **************************

(153)நாள்: 27-12-09 ஞாயிறு மாலை 4.00 முதல் 5.30 மணிவரை

இடம்: ஸத்ஸங்கம் தெரு. மடிப்பாக்கம் போன்: 22583330   22583448

பொருள்: சந்திர கிரஹணம் ஆன்மிக ஸந்தேஹ விளக்கங்கள்
**************************

மேற்படி கூட்டங்கள் நடைபெறும் ஸமயத்தில் ஆன்மிகம் ஸம்பந்தமான அனைத்து கேள்விகளையும் கேட்கலாம், இயன்றவரை பதில் தரப்படும், கூட்டம் நடைபெறும் இடங்களில் வைதிகஸ்ரீயின் வெளியீடுகள் (புஸ்தகங்கள்) அனைத்தும் கிடைக்கும், புதிய சந்தா, மற்றும் சந்தா புதுப்பித்தல் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும்.

Back