Vaithikasri
December 2009 E Mail:
vaithikasri@yahoo.com

|
(வைதிக) நிகழ்ச்சிகளின் பலனை நீண்ட காலம் தொடர்ந்து வழங்கும் சக்தி தக்ஷிணைக்கு உண்டு, ஆனால் இத்தனை தக்ஷிணைதான் தர வேண்டும், இவ்வளவு சிலவு செய்துதான் இந்த கர்மாக்களைச் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரமல்ல,அவரவர் சக்திக்குத் தக்கவாறு சிலவு செய்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதே சாஸ்திரம், தற்காலத்தில் பலரும் காலத்துக்குத் தகுந்தவாறு நிறைய சிலவு செய்து தானங்கள் செய்து அதிகமான தக்ஷிணை தந்து தனது வீட்டு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள், ஆனால் ஒரு சிலர் விஷயத்தில் இவ்வாறு நடப்பதில்லை, ஏழைகளுக்கு நிறைய தானங்கள் செய்து நிறைய தக்ஷிணைகள் தந்து நிகழ்ச்சிகளை நடத்த யஜமானர் விரும்பினாலும் கூட , நிகழ்ச்சிக்காக அழைக்கப்படும் (வயதான) உறவினர்களில் சிலர், நடுவே புகுந்து எதற்காக இவ்வளவு சிலவு செய்கிறாய்குறைக்கலாமே என்பது போன்ற சொற்களைக்கூறி தக்ஷிணை தருவதை தானங்கள் செய்வதை குறைக்கிறார்கள் அல்லது தடுக்கிறார்கள்,
நிகழ்ச்சிக்கு நம்மை ப்ரியத்துடன் அழைத்துள்ள நம் உறவினருக்கு நாம் ஏதாவது உதவி செய்யலாமே என்னும் என்னத்தில் இவ்வாறு செய்கிறார்கள், இதை ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் செய்யும் இந்தச் செயல் யஜமானருக்கும், ஏன் இவருக்குமே, நன்மையைத்தராது, மாறாக நடத்தும் நிகழ்ச்சிகளின் (பலனின்)ஆயுளை க் குறைத்துவிடும், அத்துடன்
மா த3த3ஸ்வேதி யோ ப்3ரூயாத் க3வ்யக்3னௌ ப்ராஹ்மணேஷ ச, ஸப்த ஜன்மா ப4வேத் ரோகீ3
என்பதாக பசுமாடு, அக்னி, பிராஹ்மணர், ஆகியோருக்கு தரப்படுவதை தந்தது போதும் மேலும்தராதே என்று யார் தடுக்கிறாரோ, அவர் ஏழு ஜன்மாக்கள் ரோகியாக (நோயாளியாக)க்கஷ்டப்படுவார் என்று பயமுறுத்துகிறது சாஸ்திரம்,
ஆகவே பசு மாட்டுக்குத் தரும் ஆஹாரத்தையும் அக்னியில் செய்யப்படும் ஹோமத்தையும், ப்ராஹ்மணருக்குத் தரப்படும் தக்ஷிணையையும் ஒரு போதும் தடுக்கக்கூடாது, மாறாக இன்னும் நிறைய தானங்கள் செய்து தக்ஷிணைகள் தந்து நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்னும் ஸரியான சாஸ்திரீயமான ஆலோசனைகளை, தானங்களின் மஹிமைகளை, குடும்பத்தில் இருக்கும் பெரியோர்களும் உறவினர்களும், நிகழ்ச்சியை நடத்துபவருக்கு எடுத்துக் கூறவேண்டும், இதற்கு பகவான் அனுக்ரஹிக்கட்டும். |
|
|