Vaithikasri August 2008
வைதிக ஸ்ரீ:
|
சந்திர கிரஹணம் 16.08.08 சனி இரவு இன்று இரவு ராஹுகிரஸ்தமாக சந்திரகிரஹணம் சம்பவிக்கின்றது. இந்திய ஸ்டாண்டர்டு மணிப்படி 160808 சனி பின்னிரவு 01.04 மணிக்குத் தொடங்கும் கிரஹணம் 17.08.08 ஞாயிறு அதிகாலை 04.15 மணிக்கு முடிவு பெறுகிறது, அனைவரும் (16.08.08) சனி மதியம் ஸுமார் 03.00 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். அதற்குப்பிறகு எதையும் சாப்பிடக்கூடாது, கிரஹண தோஷ பரிஹாரம் இந்த்3ரோ(அ)நலோ த3ண்டத4ரச ருக்ஷ: பாசாயுதோ4 வாயு குபே3ர ஈசா:-- குர்வந்து ஸர்வே மம ஜன்மர்க்ஷ- ராஸ்த்த2 சந்த்3ர க்3ரஹ தோ3ஷ சாந்திம் (இந்த்ரன், அக்னி ,தண்டத்தை கையில்பிடித்திருக்கும் யமன், பாச ஆயுதங்களை த்தாங்கிய வாயு,குபேரன்,ஈசானன் முதலியவர்கள், எனது ஜன்ம நக்ஷத்ரத்தில் நிகழும் கிரஹணத்தால் எனக்கு ஏற்படும் தோஷங்களை போக்கடிக்கட்டும்) மேலேகூறிய லோகத்தை ஓர்புதியதுணியிலோ, பனைஓலையிலோ, குங்குமம் அல்லது பேனாவினால் எழுதி , க்ரஹணம் நிகழும் நேரத்தில் தனது உடலில் அந்தத்துணி அல்லது ஓலை படுமாறு தலையிலோ இடுப்பிலோ கையிலோ கட்டிக்கொண்டு இந்த மந்த்ரங்களை முடிந்தவரை ஸுமார் மூன்று முறையாவது சொல்ல வேண்டும். க்ரஹணம் முடிந்தபிறகு முறையாக ஸ்னானம் செய்துவிட்டு, இந்தத் துணியை (ஓலையை) சிறிது பச்சரிசியுடன் (சக்தியுள்ளவர்கள் சிறிது ஸ்வர்ணத்தையும்) சேர்த்து சிறிய தக்ஷிணையுடன் மமஜன்மர்க்ஷே சந்த்3ரோபராக3 ப்ரயுக்த தோ3ஷ பரிஹாரார்த்த2ம் இத3ம் ஹிரண்யம் தண்டுல தா4ன்யம் ச ஸம்ப்ரத3தே3 என்று சொல்லி யாராவது ஒருவருக்கு தானம் செய்துவிட வேண்டும். குழந்தைகளின் நக்ஷத்ரத்தில் க்ரஹணம் பிடித்தால் (ஸுமார் 16 வயதிற்குள் இருந்தால்) அவர்களுக்காக தாயார் அல்லது தந்தை இந்த பரிஹாரத்தைச் செய்யலாம். 16.08.2008 சனி நள்ளிரவில் நிகழும் சந்திர க்ரஹணத்தின் போது பரிஹாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள் : ம்ருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம், சதயம், திருவோணம் நக்ஷத்ரங்களில் பிறந்தவர்கள் |
Copies of these
Books are available only with vaithikasri, # New No 488, (old No 175) T.T.K.Road,
Alwarpet,
Chennai-600 018. Tamil Nadu, India, Ph: 91-44- 24361210. vaithikasri@yahoo.com
Price & Payment Details
You can order it now using our Secure On-Line Form
CLICK HERE TO ORDER NOW.