Let us Vedic priest Enter Your Home Every Month

VAITHIKASRI August  2009 செய்திகள News

வைதிக ஸ்ரீ : ஆன்மீககலாசாரதமிழ் ஸம்ஸ்க்ருத மாத இதழ்

ஏழாம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஸந்தேஹ நிவாரணீ தமிழ்

(5ஆம் பாகம்) புஸ்தக வெளியீட்டு விழா

01.08.09 சனி 2.8.2009 ஞாயிறு

ஸ்ரீ வலம்புரி ஞான விநாயகர் ஆலயம்,குறிஞ்சி நகர் பாண்டிச்சேரி605 008.

நூல்களை வெளிட்டு அருளாசி வழங்குபவர்

குருஜி மஹாத்மா பூஜ்யஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் அவர்கள்

மற்றும் ப்ருஹ்மஸ்ரீ நன்னிலம் வைத்யனாத தீக்ஷிதர் அவர்கள்
ப்ருஹ்மஸ்ரீ வடகுடி ராம தீக்ஷிதர் அவர்கள்
வைதிகஸ்ரீ : அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.
விபரங்களுக்கு ஸ்ரீமான் ஸுப்ரமணியம் போன் 9994197028.


வைதிகஸ்ரீயின் 123 வது ஆன்மீக விளக்கக்கூட்டம்

(123)நாள்: 2-08-09 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவரை:

இடம்: ஸ்ரீ ஞானவிநாயகர் ஆலயம், பாண்டிச்சேரி போன்: 9994197028
பொருள்: விவாஹம்உபநயனம் ஆன்மீகஸந்தேஹ விளக்கங்கள்.


வைதிகஸ்ரீயின் 124 வது ஆன்மீக விளக்கக்கூட்டம்

நாள்: 9-08-09 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவர

இடம்:   வேணு கோபால ஸ்வாமி ஆலயம், கோபாலபுரம். போன் :9382643958

பொருள்:விசேஷ பூஜைகளின் விளக்கங்கள்ஆன்மீகஸந்தேஹ விளக்கம்


வைதிகஸ்ரீயின் 125, வது ஆன்மீக விளக்கக்கூட்டம்

நாள்: 09-08-0 9 ஞாயிறு மாலை 6.30 முதல் 08.00 மணிவரை:

இடம்:  ஸ்ரீ ரத்ன கிரீஸ்வரர் ஆலயம், பெஸன்ட்நகர். போன்: 24910405

பொருள்: மீமாம்ஸா சாஸ்திர விளக்கம்? ஆன்மீகஸந்தேஹ விளக்கங்கள்


வைதிகஸ்ரீயின் 126, வது ஆன்மீக விளக்கக்கூட்டம்

(126) நாள்: 160809 ஞாயிறு மாலை 6.00 முதல் 8.00 மணிவரை
இடம்: தாம்ப்ராஸ் கல்யாண மண்டபம் எஸ்.எஸ்.காலனி. மதுரை போன் :ஸ்ரீமான் ஜகன்னாதன் 9952439226 பொருள்: உலக நலனுக்காக அந்தணர்கள் ஆற்றும் ஆன்மிகப்பணி
மற்றும் ஆன்மீகஸந்தேஹ விளக்கங்கள்


வைதிகஸ்ரீயின் 127 வது ஆன்மீக விளக்கக்கூட்டம்

(128) நாள்: 30-08-09 ஞாயிறு மாலை 4.00 முதல் 5.30 மணிவரை
இடம்: தாம்ப்ராஸ் பில்டிங் 11,சபரி சாலை. மடிப்பாக்கம் போன் : 9841276558
(அம்பிகா ஸ்டோர் எதிரில் ஐயப்பன் கோவில் பஸ் ஸ்டாப்)
பொருள்: அந்தணரின் அடிப்படைக்கடமைகள் ஸந்தேஹ விளக்கங்கள்


வைதிகஸ்ரீயின் 128 வது ஆன்மீக விளக்கக்கூட்டம்

நாள்: 30-08-09 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.00 மணிவரை

இடம்:  அர்த்த நாரீஸ்வரர் ஆலயம், நங்கநல்லூர். போன் : 9444108022

பொருள்:மங்களநிகழ்ச்சிக்கு நாள் பார்ப்பது எப்படி?ஸந்தேஹ விளக்கங்கள்


 வைதிகஸ்ரீயின் ஆன்மீக விளக்கக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் வைதிகஸ்ரீயின் அனைத்து புஸ்தகங்களும் கிடைக்கும், புதியஸந்தாவும் ஸந்தா புதுப்பித்தலும் ஏற்றுக்கொள்ளப்படும்.


இந்த வருடம் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் ஆசார்யர்கள்
070709 முதல் 040909 வரை தங்கியிருக்கும் ஊர்களும் விபரங்களும்


 ச்ருங்கேரி  ஜகத்குரு ஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள்:
ச்ருங்கேரி சாரதாபீடம்
ச்ருங்கேரி. சிக்மகளூர் டிஸ்டிக், கர்நாடகா.. போன்: 08265250123

காஞ்சி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி மஹா ஸ்வாமிகள் மற்றும்
காஞ்சி ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்:
காஞ்சி காமகோடி பீடம்:ஸ்ரீ  சங்கரமடம்
, நெ1, சாலைத்தெரு காஞ்சிபுரம். போன்: 044 27222115,

சகடபுரம் ஜகத்குரு ஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த ஸ்வாமிகள்:
ஸ்ரீகாஞ்சி சங்கரா பப்ளிக் ஸ்கூல்
Gota Chokdi.Oghaj Road. S.G.Highway, Ahamadabad -
pin code 382 481.
Ph: 26464786 / 09328087757.

ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்வாமிகள்:
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவ்ன் ஆச்ரமம் ஸ்ரீவெங்கடேஸ்வரா ஸந்நிதி
, ஸ்ரீபுரம் முதல் க்ராஸ், சேஷாத்ரிபுரம் முதல் மெயின் ரோடு, பெங்களூர்  560002. போன்: 080 22316612, 23443859.

அஹோபில மடம் ஜகத்குரு ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகள் மற்றும்
அஹோபில மடம் ஸ்ரீ சின்ன ஜீயர் ஸ்வாமிகள்:
ஸ்ரீஅஹோபிலமடம்
ஸ்ரீமாலோல வேதபவனம் ப்ரகாஷ் நகர்,
பெங்களூர்  560021. போன்: 08023420745 / 23325111

தேனி ஜகத்குரு ஸ்ரீ ஓங்காரனந்தா ஸ்வாமிகள்:
ஸ்வாமி சித்பவானந்தா ஆஸ்ரமம்
, சத்ரபதி சாலை, வேதபுரி, தேனீ 625 531. போன் :04546253908


சென்னை ஆழ்வார்பேட்டையில் ஷ்ரீ ஸீதாராம குருகுல வேதபாடசாலையில்  ஒவ்வொரு ஞாயிறன்றும் காலையில்  ஸூர்ய நமஸ்காரம் நடைபெறுகிறது .ஆஸ்திகர்களும் கலந்து கொள்ளலாம்


காஞ்சியில் நடைபெற்ற ஆஹிதாக்னிகள் ஸதஸ்


ப்ரதி வருஷம்போல் இந்த வருஷமும் காஞ்சிபுரம் சங்கரமடத்தில் ஜூலை 10,11,12 தேதிகளில் ஆஹிதாக்னிகளின் ஸதஸ் நடைபெற்றது.பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தலைமையேற்று நடத்திய இந்த ஸதஸ்ஸில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா முதலான பல பகுதிகளிலிருந்தும் ஸுமார் 150 ஆஹிதாக்னிகள் கலந்துகொண்டார்கள்.

*பஞ்சாக்னி (ஐந்து) அக்னி பக்ஷம் த்ரேதாக்னி பக்ஷம் வேறுபாடுகள் எப்படி?

*ஆவஸத்யாக்னி என்பது ஔபாஸனாக்னிதானா?அல்லது வேறான அக்னியா?

*பாரததேசம் தாண்டி மற்ற (வெளி) தேசங்களுக்குச் சென்று வந்தவர்கள் ஸோமயாகங்கள் செய்யலாமா? ,* அவ்வாறு வெளிதேசம் சென்று வந்தவர்களுக்கு யாகம் செய்து வைக்கலாமா?

*அடுக்கு மாடிகளில் (பிளாட்டில்) அகனிஹோத்ர ஹோமம் இஷ்டிகள் செய்யலாமா?

*அமாவாஸ்யா இஷ்டியை இரண்டு நாளாகச் செய்யாமல் ஒரே நாளில் செய்ய என்ன ப்ரமாணம்?

*பலநாட்கள் அக்னிஹோத்ர ஹோமம் செய்ய இயலாவிட்டால் என்ன பரிஹாரம்?

* தகுதியுள்ள பெற்றோர் ஜீவித்திருக்கும் போது பெற்றோர் ஆதானம் அக்னிஹோத்ரம் ஆரம்பித்துக்கொள்ளாமல் புத்ரன் ஆதானம் அக்னிஹோத்ரம் ஆரம்பித்துக்கொள்ளலாமா? ,

*வஸோர்தாரா ஹோமத்தில் வாஜச ஸ்வாஹா என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஸ்வாஹாகாரம் சேர்க்க வேண்டுமா? போன்ற பற்பல ஸந்தேஹங்கள் எழுப்பப்பட்டு தக்க ப்ரமாணங்களுடன் ஸ்வாரஸ்யமான விவாதங்கள் நடைபெற்றன,

காஞ்சி ஸ்ரீ மடம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சதஸில் கலந்து கொண்ட அனைவருக்கும் தலா ரூ.5000 ஸம்பாவனையும், சால்வையும், ஸம்பாவனையாக ஸ்ரீ ஸ்ரீ ஆசார்யார்களால் வழங்கப்பட்டது. பெங்களூர் ஸ்ரீபாலகிருஷ்ணன் மற்றும் கும்பகோணம் ஸ்ரீலக்ஷ்மி வெங்கடரமண திக்ஷிதர் ஆகியோர் ஆஹிதாக்னிகளை ஒன்றினைத்து ஸதஸ்ஸை நிர்வகித்து நடத்தினார்கள்,

 ஆஹிதாக்னிகளின் சார்பில் பிரதிவருஷ பிக்ஷாவந்தனத்துக்கென மூலதன நிதி ஸ்ரீ மடத்தில் ஸமர்ப்பிக்கப்பட்டது. பல ஊர்களில் வஸிக்கும் ஆஹிதாக்னிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் அவரவரது ஸம்ப்ரதாயங்களை அறிந்து கொள்வதற்கு இந்த ஸதஸ் மிகப்பெரும் உதவியாக இருந்தது.


காஞ்சியில் வேதபாஷ்ய ஸதஸ் வேதபாஷ்ய பரீக்ஷைகள் : காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் ஷஷ்டியப்தபூர்த்தியில் ஸ்தாபிக்கப்பட்ட ஷஷ்ட்யப்த பூர்த்தி ட்ரஸ்ட் சார்பாக காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில் வேதபாஷ்ய சதஸ் மற்றும் வேதபாஷ்ய பரீக்ஷைகள் ஸ்ரீ ஆசார்யாள் ஸன்னிதியில் ஆகஸ்ட் 28,29,30 தேதிகளில் நடைபெறுகின்றன.


மறைந்தார் மஹோததி விஸ்வனாத சர்மா வேதம் சாஸ்திரம்ச்ரௌதம் ஆகியவற்றில் பாரத தேசத்திலேயே தலைசிறந்த வித்வானாக வாழ்ந்து ஆஸ்திகர்களுக்கு பல விதத்திலும் ம்ஹோபகாரமாக வாழ்ந்து வந்த குன்னம் ப்ருஹ்மஸ்ரீ விஸ்வனாத சர்மா அவர்கள் சென்ற 040709 அன்று தனது பௌதிக சரீரத்தை த்யாகம் செய்தார், எப்போதும் எந்த விஷயத்திலும் ஸந்தேஹங்களை தீர்த்து வைத்து வழிகாட்டி வந்த அன்னாரது இழப்பு ஆஸ்திகர்களுக்கும் வைதிகஸ்ரீக்கும் மிகப்பெரும் இழப்பாகும்


நியாய வேதாந்த சிரோமணி புதுக்கோட்டை ப்ருஹ்மஸ்ரீ பஞ்சாபகேச சாஸ்திரிகளின் 102ஆவது வருஷ நினைவாக காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில் 080809 முதல் 140809 முடிய வடகுடி ப்ருஹ்மஸ்ரீ ராமதீக்ஷிதர் மூலம் ஸ்ரீமத்பாகவத ஸப்தாஹ பாராயணம் மற்றும் ப்ரவசனம் நடைபெறுகிறது, மேலும் 150809 முதல் 210809 முடிய கோவிந்தபுரம் ஸ்ரீ பஜனாச்ரமத்திலும் ஸ்ரீ ராமதீக்ஷிதரின் ஸப்தாஹ ப்ரவசனம் நடைபெறுகிறது.


வைதிகஸ்ரீ அலுவலகத்துக்கு போன் செய்பவர்கள் அலுவலக நேரத்தில் (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிக் குள்) போன் (044 24361210) செய்யவும். தர்ம சாஸ்திர விளக்கங்களுக்கு கனபாடிகளை ஸெல்போன் மூலம் தொடர்பு கொள்ளவும்.

Back