Let us Vedic priest Enter Your Home Every Month

Vaithikasri July 2010  News
E Mail: vaithikasri@yahoo.com

நதியில் ஸ்னானம் செய்யக்கூடாத நாட்கள் (ஸர்வ நதீ ரஜஸ்வலா) 17-07-10 19-07-10 ஆடிமாதப் பிறப்பான 170710 முதல் 190710 முடிய மூன்று நாட்கள் காவேரீ, நர்மதா, யமுனா, முதலிய அனைத்து புண்ய  நதிகளுக்கும் அதன் கிளை நதிகளுக்கும் அசுத்தி, ஆகவே இந்த மூன்று நாட்களிலும் அனைத்து புண்ய நதிகளிலும் கிளை நதிகளிலும் ஸ்னானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.


காஞ்சி ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஜயந்தி 28-07-10 புதன் புதுப்பெரியவாள் என்று அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீஸ்வாமிகள் இருள்நீக்கி என்னும் கிராமத்தில், அவிட்ட நக்ஷத்திரத்தில் அவதரித்த நன்நாளான இன்று நாம் அனைவரும் அவரது பாதம் பணிந்து,அவர் காட்டும் வழியில் நம்மையும் இணைத்துக் கொண்டு, மனிதப் பிறவியை பயனுள்ளதாக்கி குருவருளையும் திருவருளையும் பெற்று ஸுகமாய் வாழ முயற்சிப்போம்


கர்கடக ஸங்க்ரமணம் தக்ஷிணாயனம் (ஆடி மாதப்பிறப்பு) 16-07-10 வெள்ளி யாருடைய ஜன்ம நக்ஷத்திரத்தன்று ஸூர்ய ஸங்க்ரமணம் (மாதப்பிறப்பு) நிகழ்கிறதோ, அவருக்கு அந்த மாதம் விரோதிகள் அதிகமாவார்கள், மன க்லேசம், பணவிரயம் ஏற்படும் , ஆகவே மேற்படி தோஷங்கள் விலக ஒருசில தானங்களைச் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. க்ருத தேநு ப்ரதானம் ச கர்கடேபி விஷ்யதே என்னும் நிர்ணய ஸிந்துவின் வாக்யப்படி கர்கடக (ஆடி) மாதம் பிறக்கும் உத்திரம் (கார்த்திகை உத்திராட) நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்170710 சனிக்கிழமை காலையில் ஏழைகளுக்கு பசு நெய் தானம் செய்யலாம், மேலும் கன்றுடன் கூடிய பசுமாட்டை பூஜித்து வைக்கோல் புல் தீவனம் போன்ற ஆஹாரத்தைத் தரலாம், அனைத்து தோஷங்களும் விலகி மாதம் முழுவதும் நல்ல பலன் ஏற்படும்.


சேலம் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாச்ரமத்தில் வியாஸபூஜா சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகளின் உபதேசத்தின்படி ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சாரதா சங்கர மடஸ்தாபகர் ஸ்ரீ ப்ருஹ்மானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள்ஸ்ரீ ஸ்ரீ ஸத்குரு சாந்தானந்த ஸ்வாமிகளின் சேலம் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாசிரமத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு 25072010 ஞாயிறன்று ஸ்ரீவியாஸ பூர்ணிமா பூஜையுடன் தொடங்கி 23092010 வரை சாதுர்மாஸ்ய விரதத்தை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாசிரமத்தில் அனுஷ்டிக்கிறார். தொடர்புக்கு ஆசிரமம் ஸ்கந்தாசிரமம்04272240660 ஜபமுறையும் பலனும்: காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து, 45 நாட்கள், நெய்யில் கலந்த மிளகுப்பொடி தேன் நிவேதனம் செய்து தினந்தோறும் 1000 தரம் இந்த சுலோகத்தை ஜபம் செய்தால் எல்லாவிதமான சந்தேகங்களும் நீங்கும் மற்றும், ஜலோதரம், தீராச்சளி, சீதள ஜ்வரம் போன்ற அனைத்து ஜலரோகங்களும் (வியாதிகளும்) விலகும்.


ஸ்ரீ வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபா நாள்: 010710 வியாழன் முதல் 040710 ஞாயிறு முடிய இடம்: ஸ்ரீ காஞ்சி சங்கர மடம், மீனாக்ஷி தெரு, பெரம்பூர்,சென்னை11 நிகழ்ச்சி வேதபாராயணம், தர்மசாஸ்த்ர உபன்யாஸம் ஆவஹந்தீ ஹோமம் (வைதிகஸ்ரீ ஆசிரியரின் ஆபஸ்தம்ப க்ருஹ்ய ஸூத்ரம் ப்ரவசனம் 030710 சனி மாலை 7.00 மணி)


ஆஸ்திக ஸேவா ஸமிதி சென்னை89 நாள்: 190710 திங்கள் முதல் 010810 ஞாயிறு முடிய இடம்: ஸ்ரீ அயோத்யா மண்டபம்,மேலமாம்பலம்,சென்னை33 நிகழ்ச்சி: ஸ்ரீஅண்ணாவின் ஸ்ரீ ராமாயண உபன்யாஸம்சதசண்டீ யக்ஞம் சதுர் வேதபாராயணம்ரிக்ஸம்ஹிதா ஹோமம்ஸ்ரீ ஸீதாகல்யாணம்  (வைதிகஸ்ரீஆசிரியரின் ப்ரவசனம்280710 புதன் மாலை06.00 மணி)


வேத தர்ம கைங்கர்ய ஸபா அம்பத்தூர் சென்னை53 நாள்: 220710 வியாழன் முதல் 250710 ஞாயிறு முடிய
இடம்: வரஸித்தி விநாயகர் ஆலயம்,ஸுந்தர் தெரு, ராம் நகர்,சென்னை53 நிகழ்ச்சி: ஸ்ரீ வியாஸ பௌர்ணமி சதுர் வேதபாராயணம் உபன்யாஸம்
தொடர்புக்கு: ராமச்சந்திரன் !26580714. ஆதிசங்கர சாஸ்திரிகள் !26583552


ஸம்வத்ஸராபிஷேகம் நவசண்டீ மஹாயக்ஞம் நாள்: 230710 வெள்ளி முதல் 250710 ஞாயிறு முடிய
இடம்: குன்று மேடு ஸ்ரீ பாலஸுப்ரமண்ய ஸ்வாமி ஆலயம்,
குன்று மேடு கிராமம் செங்கம் தாலுக்கா, திருவண்ணாமலை மாவட்டம் நிகழ்ச்சி: ஸ்ரீ நவசண்டீ மஹாயக்ஞம்உபன்யாஸம் ஹோமம் (வைதிகஸ்ரீஆசிரியரின் ப்ரவசனம்240710 சனி மாலை7.00 மணி) தொடர்புக்கு: கிருஷ்ணமூர்த்தி ! 9448068508 ,பாலுசாஸ்திரி ! 9443557697


ஸ்ரீ வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபா நாள்: 240710 சனி முதல் 280710 புதன் முடிய இடம்: ஸ்ரீ காஞ்சி சங்கர மடம், இருள் நீக்கி கிராமம்,திருவாரூர் மாவட்டம் நிகழ்ச்சி வேதபாராயணம், தர்மசாஸ்த்ர உபன்யாஸம் ஆவஹந்தீ ஹோமம் விபரங்களுக்கு ஸ்ரீ கணேசன் திருவான்மியூர் போன்: 044 24902240


அக்னிஹோத்ரிகள் ஆஹிதாக்னிகள் ஸதஸ் முன்னிலை பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர ஸ்ரீ விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் நாள்: 300710 வெள்ளி முதல் 010810 ஞாயிறு முடிய இடம்: ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கர மடம், காஞ்சிபுரம் !(044) 27222115 அக்னிஹோத்ரிகள் ஸதஸ் ச்ரௌத ப்ரயோக விஷய விவாதங்கள்


பஞ்சாங்க கணிதர்கள் தர்ம சாஸ்திர வித்வான்கள் ஸதஸ் முன்னிலை பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர ஸ்ரீ விஜயேந்திரஸரஸ்வதி ஸ்வாமிகள் நாள்: 050810 வியாழன் முதல் 070810 சனி முடிய இடம்: ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கர மடம், காஞ்சிபுரம் ! (044) 27222115 நிகழ்ச்சி அடுத்த (கர) வருஷ பஞ்சாங்க விபரங்களை நிர்ணயம் செய்தல்


வேதபாஷ்ய ஸபா சாஸ்திர பரீக்ஷைகள் அத்வைத ஸபா முன்னிலை பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர ஸ்ரீ விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் நாள்: 170910 வியாழன் முதல் 190910 ஞாயிறு முடிய இடம்: ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கர மடம், காஞ்சிபுரம் !(044) 27222115 நிகழ்ச்சி சாஸ்திரங்களில் வேதபாஷ்யத்தில் பரீக்ஷைகள்வாக்யார்த்தங்கள் மேற்படி ஸதஸ்ஸுகள் அனைத்துக்கும் தொடர்புகொள்ள அடையப்பலம் ப்ருஹ்மஸ்ரீ ராமகிருஷண தீக்ஷிதர் போன் (044) 27230057


வைதிக ஸ்ரீ : எட்டாம் ஆண்டு துவக்க விழா
13.08.10 வெள்ளி 15.8.10 ஞாயிறு ஸ்ரீ அயோத்யா அவமேத மண்டபம்
மேலமாம்பலம், சென்னை600033. ஆன்மிக கருத்தரங்கம் விவாதங்கள்போட்டிகள் வைதிகஸ்ரீ விருதுகள்
விபரங்கள் அடுத்த இதழில்


வைதிகஸ்ரீ யின் ஆன்மீக விளக்கக்கூட்டம்
(206,207,208,209,210,211,212,213,214ஆவது )

(206) நாள்: 04-07-10 ஞாயிறு மாலை 4.00 முதல் 5.30 மணிவரை
இடம்: ஸ்ரீ சங்கர குருகுலம், அபிராமபுரம். போன் : 9940049726
பொருள்: ஸ்ரீ ருத்ர மஹாமந்திர பாஷ்யம்6, மற்றும் ஸந்தேஹ விளக்கம்


(207) நாள்: 04-07-10 ஞாயிறு மாலை 7.00 முதல் 8.30 மணிவரை:

இடம்: ஸ்ரீ ரத்ன கிரீஸ்வரர் ஆலயம், பெஸன்ட்நகர், போன்: 24910405
பொருள்: மஹாபாரதம் (யக்ஷ ப்ரச்னம்) ஆன்மிக ஸந்தேஹ விளக்கம்


(208) நாள்: 10-07-10 சனி மாலை 7.00 முதல் 8.30 மணிவரை
இடம்: ஜகத்குரு பதரி ஸ்ரீ சங்கராசார்யார் (சகடபுரம்) ஸ்ரீ மடம், நெ 55/30,
அகஸ்தியர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை.! 044 22397900
பொருள்: 40ஸம்ஸ்காரங்கள்உபநயனம்பூணல் போடுதல்


(209)நாள்: 11-07-10 ஞாயிறு மாலை 4.00 முதல் 5.30 மணிவரை
இடம்: ஸத்ஸங்கம் தெரு. மடிப்பாக்கம் போன்: 22583330 22583448
பொருள்: இறந்தபின் நடப்பது என்ன? (பகுதி4) ஸந்தேஹ விளக்கங்கள்


(210)நாள்: 11-07-10ஞாயிறு மாலை 06.30 முதல் 8.30 மணிவரை
இடம்: ஸ்ரீ வஸந்த மண்டபம்,
குரோம்பேட்டை,சென்னை .!9840155313
பொருள்: ஆலய வழிபாடு மனிதப்பிறவிஆன்மிக ஸந்தேஹ விளக்கங்கள்


(211) நாள்: 17-07-10 சனி மாலை 4.00 முதல் 5.00 மணிவரை
இடம்: வேணுகோபால ஸ்வாமி ஆலயம், கோபாலபுரம். போன் :9382643958
பொருள்: தக்ஷிணாயன புண்யகாலம்ஆன்மிக ஸந்தேஹ விளக்கம்


(212)நாள்: 17-07-10சனி மாலை 7.00 முதல் 08.30 மணிவரை
இடம்: ஸ்ரீ யாக்ஞவல்க்ய ஸபா, பழைய பல்லாவரம். சென்னை117.
பொருள்: பித்ரு கர்மாக்கள் (பகுதி3) ஆன்மிக ஸந்தேஹ விளக்கங்கள்.


(213) நாள்: 18-07-10 ஞாயிறு மாலை 3.00 முதல் 5.00 மணிவரை
இடம்: ஸ்ரீ அயோத்யா மண்டபம், மேலமாம்பலம். போன் : 24893077

பொருள்: மனிதனின் முற்பிறவி என்ன? கண்டு பிடிப்பது எப்படி?


(214)நாள்: 18-07-10 ஞாயிறு மாலை 07.00 முதல் 8.30 மணிவரை
இடம்: அர்த்த நாரீஸ்வரர் ஆலயம், நங்கநல்லூர். போன் : 9444108022 பொருள்: தேவீ மாஹாத்மிய பாராயணம்(பகுதி3) ஸந்தேஹ விளக்கம்


மேற்படி கூட்டங்களில் ஆன்மிகம் ஸம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கு இயன்றவரை பதில் தரப்படும், மேலும் கூட்டம் நடைபெறும் ஸமயங்களில் வைதிகஸ்ரீயின் அனைத்து வெளியீடுகளும் (புஸ்தகங்களும்) கிடைக்கும், புதிய சந்தா, மற்றும் சந்தா புதுப்பித்தல் ஆகியவையும் ஏற்றுக் கொள்ளப்படும்.


வைதிகஸ்ரீயின் மந்திரங்களின் மஹத்துவம்
மந்திர ஜபம் செய்வது எப்படி? யாருக்கு என்ன மந்திரம்? குருவை மந்திரத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? குரு கிடைக்காவிட்டால்?, உபதேசம் செய்து கொள்ள சிறந்த காலம்? மந்திரத்துக்கு 10 ஸம்ஸ்காரம்? ஜபம் செய்யும் போது ஆஸனங்கள்? ருத்ராக்ஷத்தின் பெருமை? காயத்ரீ மந்திர மஹிமை போன்ற ஸுமார் 100 விஷயங்களுடன் விலை ரூ 100 மட்டும்.

Back