Vaithikasri
March 2010 E Mail:
vaithikasri@yahoo.com

|
அந்த எண்ணத்துக்கு பதிலளிக்கும் விதத்தில் பகவானே வைகுண்டத்திலிருந்து பூலோகத்தில் புண்யமான பாரதத்தில் அயோத்தி மாநகரில் கௌஸல்யாவின் தவப் புதல்வனாக தசரதராஜ குமாரனாக ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியாக அவதரித்தார், அவர் கூறிய வேதவாக்குப்படி வாழ்ந்தும் காட்டினார், மாத்ரு பக்தி பித்ரு பக்தி ஸஹோதர வாத்ஸல்யம் உத்தம ஸ்நேஹம் (நட்பு) ஆகியவற்றிற்கு சிறந்த உதாஹரணம் ஸ்ரீ ராம சரித்திரம்தான், ஆகவேதான் தேசப்பிதா மஹாத்மா காந்தி அமரர் ராஜாஜி போன்றோர் ராமராஜ்யம் வேண்டும் என்று கனவு கண்டார்கள், இந்த தேசத்தில் மனிதனாகப்பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய கதையும் படிக்க வேண்டிய புஸ்தகமும் ஸ்ரீமத்ராமாயணம்தான், வேண்டும் அனைத்தையும் பெற்றுத்தரும் ஸ்ரீமத் ராமாயணத்தில் அவரவர் விருப்பத்துக்குத் தக்கவாறு சிற்சில ஸர்கங்களை மட்டும் பாராயணம் செய்து கூட அந்தந்த பலன்களையடையலாம், வாயு புராணத்தைச்சேர்ந்த உமா ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ள ஸ்ரீமத்ராமாயண பாராயண விபரங்களை இந்த இதழில் வெளியிட்டுள்ளோம், ஸ்ரீமத் ராமாயணத்தை முழுவதும் அல்லது சிற்சில ஸர்கங்களையாவது படித்து, பயனையடையவும், ஸ்ரீமத் ராமாயன சரித்திரம் பாமர மக்கள் வரை சென்றடைந்து ஒழுக்கமும் தூய்மையும் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ப்ரகாசிக்கவும் ஸ்ரீ ஸீதாராமர் அனுக்ரஹிக்கட்டும். |
|
|