Vaithikasri
June 2010 E Mail:
vaithikasri@yahoo.com

|
இவ்வாறு தெய்வ அருளால் பிறவியெடுக்கும் ஒரு ஜீவன் நம் குடும்பத்தில் வந்து பிறக்க வேண்டுமென்றால், நமக்கு தெய்வ அருள் இருக்கிறது என்றுதான் பொருள், இந்த தெய்வ அருள் ஒரு சிலருக்குத் தான் கிடைக்கிறது, திருமணமாகி ஒரு சில மாதங்களிலேயே குழந்தை தவழ்ந்து விளையாடும் குடும்பத்தையும் , திருமணமாகி வெகு நாட்களாகியும் பல பரிஹாரங்கள் செய்தும் குழந்தை பிறக்கத் தாமதமாகும் குடும்பத்தையும் காண்கிறோம்,
ஆகவே குழந்தை எப்போது பிறக்கவேண்டும்? எப்படிப் பிறக்க வேண்டும்? என்பதை நாம்
தீர்மானிக்க முடியாது, நமது புண்யபாபங்களின் பரிணாமத்துக்கு ஏற்ப தெய்வமே இதை
தீர்மானிக்கிறது, தற்காலத்தில் ஒரு சிலர்,பொருளாதாரம் போதாதே!,அழகு குறையுமே! போன்ற ஒரு சில ஸுயநலக் காரணத்துக்காக குழந்தை பிறப்பதைத் தள்ளி போடுகிறார்கள், அல்லது கர்ப்பத்தில் உருவாகும் குழந்தையை கலைத்து விடுகிறார்கள் என்பதை அறிகிறோம், இது தவிர்க்கப்பட வேண்டும், ஏனென்றால் ஒரு ஜீவனை கொல்லுதல் என்பது மிகப்பெரும் பாபம், கர்ப்பத்தில் உருவாகும் ஜீவனுக்கும் உயிர், மனது, உணர்ச்சிகள், உடல், ஆகியவை உண்டு, அந்த ஜீவனைக் கொலை செய்தல் என்பது ப்ரூணஹத்தி (குழந்தையைக் கொல்லுதல்) என்னும் பாபம், இதற்கு ப்ராயஸ்சித்தம் செய்வது தற்காலத்தில் ஸாத்யமில்லை, மேலும் பாபம் செய்துவிட்டு ப்ராயஸ்சித்தம் செய்து கொள்வதைக் காட்டிலும் பாபமே செய்யாமல் இருக்கலாம் அல்லவா? இவ்வாறு சிசுவை கொலை செய்தல் அல்லது சிசு உருவாவதைத் தடுத்தல் என்னும் பாபம் தன்னை மட்டுமில்லாமல் தனது குடும்பத்தினரையும் கூட பாதிக்கலாம், நமது தேசத்தில் எவ்வளவோ பேர்கள் தனக்கு வம்ச வ்ருத்திக்கு ஏதாவது ஒரு குழந்தையாவது பிறக்காதா! என்று பல வருஷமாக ஏங்கிக் கொண்டிருக்க, இறைவன் நமக்கு மட்டும் காலத்தில் கருவில் குழந்தை உருவாகும் பாக்கியத்தை அளித்துள்ளானே ! இது நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்! என்று நினைத்து கணவனும் மனைவியும் குடும்பத்தினரும் ஸந்தோஷப்பட வேண்டும், குழந்தைச் செல்வம் என்பது மிகப்பெரும் செல்வம், மற்ற வஸதிகளைப் போலவே இதுவும் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிட்டும், அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அவ்வாறின்றி இப்போதுதானே திருமணம் ஆகியிருக்கிறது, இப்போது குழந்தைக்கு என்ன அவஸரம், என்ற தவறான எண்ணத்தை வளர்த்துக்கொள்ளக் கூடாது, ஜாதக ரீதியாக ஏழ்மையை கஷ்டத்தைஅனுபவிக்கும் குடும்பம் கூட, குழந்தை பிறந்த நேரத்தால், குழந்தையின் அதிர்ஷ்டத்தால் அனைத்து கஷ்டங்களும் விலகி சீரும் சிறப்புமாக வாழுகிறது என்பதை இன்றும் நாம் பார்க்கிறோம்.
சொல்லப்போனால் குழந்தை பெற்றுக்கொள்வதற்கோ அதை தள்ளிப்போடுவதற்கோ அல்லது தடுப்பதற்கோ நமக்கு முழு ஸுதந்திரம் இல்லை, நமக்குப் பிறக்கும் குழந்தை இந்த தேசத்தின் குழந்தை, இந்த ஸமூகத்தை மேம்படுத்த வரும் மாவீரன், ஆகவே இவற்றை நினைத்து நல்ல குழந்தை நம் வம்சத்தில் பிறப்பதை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குழந்தை எப்போது பிறக்க வேண்டும் என்பதை தான் முடிவு செய்யக்கூடாது, தெய்வ அருளால் ஏற்படும் கர்ப்பத்தை கலைக்க முயற்சிக்கக்கூடாது, காலத்தில் பிறக்கும் குழந்தையை ஏற்றுக் கொண்டு நன்மையையடைய ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும். |
|
|