Vaithikasri August 2010- News
E Mail:
vaithikasri@yahoo.com
|
வைதிக ஸ்ரீ :
எட்டாம் ஆண்டு துவக்க விழா ஸந்தியாவந்தன போட்டிகள் ஸந்தியாவந்தன போட்டிகள் ரிக்வேத யஜுர்வேத ஸாம வேதங்களுக்கு தனித்தனியே 15-08-10 ஞாயிறு காலை 8.00 மணி முதல் மேல மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் நடைபெறும் , இதில் ஸந்த்யாவந்தன மந்திரங்கள் (மனப்பாடம்) மற்றும் செயல் முறை விளக்கங்களில் கேள்விகள் கேட்கப்படும், வெற்றி பெற்றவர்களுக்கு 15-08-10 ஞாயிறு மாலை ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் முன்னிலையில் ஸர்டிபிகேட்டும் பரிசுகளும் வழங்கப்படும், முதல் பரிசு ரூ 1000 (1நபர்), இரண்டாம் பரிசு ரூ 500 (3நபர்) மூன்றாம் பரிசு ரூ 250 (6நபர்) ஆறுதல் பரிசு ரூ 100 (10நபர்)இந்த போட்டிகளில் ஸுமார் ஏழு வயது முதல் 18 வயதுள்ள அனைவரும் கலந்து கொள்லலாம். விபரங்களுக்கு வைதிகஸ்ரீ: 04424361210- 24361211.
வைதிகஸ்ரீ யின் ஆன்மீக விளக்கக்கூட்டம்
மேற்படி கூட்டங்களில் ஆன்மிகம் ஸம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கு இயன்றவரை பதில் தரப்படும், கூட்டம் நடைபெறும் ஸமயங்களில் வைதிகஸ்ரீயின் அனைத்து வெளியீடுகளும் (புஸ்தகங்களும்) கிடைக்கும், புதிய சந்தா, மற்றும் சந்தா புதுப்பித்தல் ஆகியவையும் ஏற்றுக் கொள்ளப்படும். மும்பையில் ஸ்ரீ சகடபுரம் ஸ்வாமிகள் சாதுர்மாஸ்யம ஸ்ரீ க்ஷேத்ரம் சகடபுரம் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணாநந்த தீர்த்த ஸ்வாமிகள் 25-07-2010 ஞாயிறு முதல் 23-09-2010 வரை சாதுர்மாஸ்ய விரதத்தை மும்பை செம்பூர் ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஸமாஜத்தில் தினஸரி பூஜை அனுக்ரஹ பாஷனத்துடன் அனுஷ்டிக்கிறார்கள்.ஆஸ்திகர்கள் இந்த நாட்களில் பிக்ஷாவந்தனம் செய்து, தினஸரி (மாலை 5.00 முதல் 7.30 மணி) பூஜையை தரிசனம் செய்து பகவத் க்ருபையையும் ஆசார்ய க்ருபையையும் அடையலாம் தொடர்புக்குஹரிஹரபுத்ர ஸமாஜம், மும்பை 022--25253764. ஹரிஹரபுத்ரபீடாதிபதி சாதுர்மாஸ்யம் கர்னாடகா மாநிலம் ஹரிஹரபுத்ர மடாதிபதி பூஜ்யஸ்ரீ சச்சிதாநந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் 250710 ஞாயிறு முதல் 230910 வரை சாதுர்மாஸ்ய விரதத்தை நெ2, 2ஆவதுமெயின் ரோட், காந்தி நகர்,அடையார், சென்னை20, ஸ்ரீ அனந்தபத்மனாப ஸ்வாமி ஆலய மண்டபத்தில் அனுஷ்டிக்கிறார். தொடர்புக்கு தர்மாதிகாரி ஸ்ரீமான் ஸதீஷ் 09841582869.
சென்னையில் ஸம்பூர்ண ஸஹஸ்ர சண்டீ
மஹாயாகம காரைக்குடியில் கோகுலாஷ்டமி பாகவத ஸப்தாஹம்
நாள்: 01-09-10 புதன் முதல் 07-09-10
செவ்வாய் முடிய
இடம்: ராமநவமி மஹோத்ஸவ ஸபாகாரைக்குடி
630002,.!9486561332 'வாஸ்து நாள் 22.8.2010 ஞாயிறு மாலை 03.24 முதல் 03.54 வரை புதியதாக கட்டடம் கட்டுவதற்கு ஆரம்பிக்கவும், பூமி பூஜை செய்யவும் மிகச் சிறந்த நாள். |