Vaithikasri April 2010 News
E Mail:
vaithikasri@yahoo.com
|
விக்ருதி வைதிகஸ்ரீ பஞ்சாங்கம் விக்ருதி வருஷம் முழுவதுக்குமான ஷண்ணவதி தர்ப்பண ஸங்கல்பங்கள், பஞ்சாங்கம், குடும்ப விவரண ஸங்க்ரஹம், வம்ச ஸங்க்ரஹணம், முதலிய விபரங்களுடன் கூடிய விக்ருதி வருஷ வைதீகஸ்ரீ பஞ்சாங்கம் தற்சமயம் தயாராகி விட்டது, வாசகர்கள் வைதீகஸ்ரீ அலுவலகத்தில் ஸந்தா (ரசீது) எண்ணை அல்லது விலாஸத்தைத் தெரிவித்து நேரில் பெற்றுக்கொள்ளலாம், நன்கொடை அனுப்பியவர்களுக்கு கொரியர் மூலம் அனுப்பபடும், நேரில் பெற்றுக் கொள்ள இயலாத அனைவருக்கும் ஏப்ரல் 10 தேதிக்குப்பிறகு ஒவ்வொரு ஊராக ஸாதாரண தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும், (ஏப்ரல் மாதத்துக்குள் ஸந்தா புதுப்பிக்காதவர்களுக்கு பஞ்சாங்கம் அனுப்ப இயலாது) விபரங்களுக்கு: வைதிகஸ்ரீ: புது எண் 488 ஸ்ரீ கணேஷ் பிளாட்ஸ், ஆழ்வார்பேட்டை, சென்னை18, போன் 044 24361210, 04424361211 விக்ருதி வருஷப்பிறப்பை (புத்தாண்டை) முன்னிட்டு வைதிகஸ்ரீ சார்பாக புது எண் 488 ,பழைய எண் 175 டி.டி.கே ரோட், ஆழ்வார்பேட்டை சென்னை.18 போன் 24361210. வேதபவனத்தில் 14-04-2010 புதன் காலை 10.00 மணிக்கு பஞ்சாங்க படனமும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும் , அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம், போன்: 24361210 24361211. (14-04-2010 புதன்) வருஷப்பிறப்பன்று சென்னையில் கீழ்கண்ட இடங்களில் வைதிகஸ்ரீ ஆசிரியர் நன்னிலம் ப்ருஹ்மஸ்ரீ ராஜகோபால கனபாடிகள் பஞ்சாங்க படனம் நிகழ்த்துகிறார்கள். காலை 09.15 மணி,* ஸ்ரீ வேணு கோபாலஸ்வாமி ஆலயம், கோபாலபுரம், சென்னை 600086. மதியம் 03.00 மணி * ஸ்ரீ அயோத்யா மண்டபம். மேல மாம்பலம். போன் 24893077 மாலை 4.30 மணி.* ரத்ன கிரீஸ்வரர் கோவில் பெஸண்ட் நகர், சென்னை.போன்: 044 24910405 மாலை05.30 மணி வரஸித்தி வினாயகர்கோவில் ஸ்ரீநகர் காலனி. சைதாப்பேட்டை போன் 9444042541 மாலை 7.00 மணி *ஸ்ரீகிருஷ்ணன் கோவில் திருநகர், ஆழ்வார் திருநகர் (மெகாமார்ட் பின்புறம்) போன் 24862758. ப்ராப்னோதி ஸௌக்2யம் விபுலாம் யஸ்ச என்ற வாக்கியப்படி புத்தாண்டு நாளன்று பஞ்சாங்க படனத்தை சிரத்தையுடன் கேட்பதால் அந்த வருஷம் முழுவதும் அளவற்ற புகழும்ஸௌக்யமும் ஸௌபாக்யமும் கிட்டும். அவரவர்கள் இருக்கும் இடம் அருகில் (ஆலயங்களில்) நடைபெறும் பஞ்சாங்க படன நிகழ்ச்சிக்குச் சென்று வருஷ பலனை கேட்டு நன்மையை அடையலாம்.ஸ்ரீ ஸீதாராம குருகுலம் டிரஸ்ட் (வைதிகஸ்ரீ:) புது எண் 486 டி.டி.கே ரோடு, சென்னை.18 (183,184,185,186,187,188,189, ஆவது )ஆன்மீக விளக்கக்கூட்டங்கள் (183)நாள்: 03-04-10 சனி இரவு 7.00 முதல் 8.30 மணிவரை
இடம்: ஜகத்குரு பதரி ஸ்ரீ சங்கராசார்யார் (சகடபுரம்) ஸ்ரீ மடம், நெ 55/30, பொருள்: 40 ஸம்ஸ்காரங்கள் (பும்ஸுவனம்ஸீமந்தம்) ஸந்தேஹ விளக்கம் (184)நாள்: 04-04-10 ஞாயிறு மாலை 4.00 முதல் 5.30 மணிவரை இடம்: ஸ்ரீ சங்கர குருகுலம், அபிராமபுரம். போன் : 9940049726 பொருள்: ஸ்ரீ ருத்ர மஹாமந்திர பாஷ்யம்5, மற்றும் ஸந்தேஹ விளக்கம் (185) நாள்: 04-04-10 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.00 மணிவரை: இடம்: ஸ்ரீ ரத்ன கிரீஸ்வரர் ஆலயம், பெஸன்ட்நகர், போன்: 24910405 பொருள்: அதிக மாதம் என்றால் என்ன? எப்படி? என்ன செய்யலாம்? (186)நாள்: 11-04-10 ஞாயிறு மாலை 4.00 முதல் 5.30 மணிவரை இடம்: ஸத்ஸங்கம் தெரு. மடிப்பாக்கம் போன்: 22583330 22583448 பொருள்: இறந்தபின்னால் நடப்பது என்ன? ஸந்தேஹ விளக்கங்கள் (187)நாள்:11-04-10 ஞாயிறு மாலை 6.30 முதல் 08.30 மணிவரை
இடம்: ஸ்ரீ யாக்ஞவல்க்ய ஸபா, புது எண் 28, பெருமாள் கோவில் தெரு, பொருள்: பித்ரு கர்மாக்கள் ஆன்மிக ஸந்தேஹ விளக்கங்கள். (188) நாள்: 18-04-10 ஞாயிறு மாலை 3.30 முதல் 5.00 மணிவரை இடம்: ஸ்ரீ அயோத்யா மண்டபம், மேலமாம்பலம். போன் : 24893077 பொருள்: பூணல் போடுதல் ? எப்படி? எப்போது? ஸந்தேஹ விளக்கங்கள். (189)நாள்: 18-04-10 ஞாயிறு மாலை 6.30 முதல் 8.30 மணிவரை இடம்: அர்த்த நாரீஸ்வரர் ஆலயம், நங்கநல்லூர். போன் : 9444108022 பொருள்: ஸ்ரீமத் ராமாயணத்தில் பரதர் சொல்லும் பாபங்கள்? மேற்படி கூட்டங்களில் ஆன்மிகம் ஸம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கு இயன்றவரை பதில் தரப்படும், மேலும் கூட்டம் நடைபெறும் ஸமயங்களில் வைதிகஸ்ரீயின் அனைத்து வெளியீடுகளும் (புஸ்தகங்களும்) கிடைக்கும், புதிய சந்தா, மற்றும் சந்தா புதுப்பித்தல் ஆகியவையும் ஏற்றுக் கொள்ளப்படும். முஹூர்தத்துக்கு தவிர்க்க வேண்டிய நாட்கள்
ரிக்,யஜுஸ்,ஸாம வேதங்களுக்கு நவக்ரஹங்களில் முறையே குரு, சுக்ரன், செவ்வாய் என்னும்
க்ரஹங்கள் அதிபதிகள். இந்த மூன்று க்ரஹங்களும் அஸ்தமனமான (சக்திக்
குறைவான)நாட்களில் விவாஹம், உபநயனம், க்ருஹப்ரவேசம் கும்பாபிஷேகம் போன்ற மங்கள
நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. ஆகவே மேற்கூறிய நிகழ்ச்சிகளுக்கு நாட்கள்
தேர்ந்தெடுக்கும் போது கீழ்கண்ட அஸ்தமன(சக்தி குறைந்த) நாட்களைத் தவிர்க்க
முயற்சிக்கலாம்.
26-03-11
சனி முதல் விக்ருதி வருஷம் முழுவதும்(வாக்யபாம்புபஞ்சாங்கம்)
யஜுர்வேதத்தினர் தவிர்க்க வேண்டிய சுக்ரன் அஸ்தமன நாட்கள்
ஸாமவேதத்தினர் தவிர்க்க வேண்டிய செவ்வாய் அஸ்தமன நாட்கள் வைதிகஸ்ரீயின் பாரிதோஷிக ஸ்ரீ கூப்பன் விவாஹம் உபநயனம் ஸீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளில் அன்பளிப்பு அளிக்கச் சிறந்த பாரிதோஷிக ஸ்ரீ என்னும் அன்பளிப்புத் தொகை கூப்பன் வைதிகஸ்ரீ சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்தக்கூப்பனை பயன்படுத்தி வைதிகஸ்ரீயின் புஸ்தகங்களில் விருப்பமானவற்றை தேர்ந்தெடுத்து 10 % தள்ளுபடிவிலையில் வாங்கிக் கொள்ளலாம், இந்தக் கூப்பன் வைதிகஸ்ரீ அலுவலகத்தில் கிடைக்கும். வைதிகஸ்ரீ: போன் 044-24361210. வைதிகஸ்ரீயின் வாசகர்கள் தாங்களின் விலாஸ மாறுதல்விவாஹ ப்ராப்தி சந்தா காலம், சந்தா செலுத்தியது ஆகியவற்றை தபால் மூலமாகவோ, 9444680189 என்னும் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ, அல்லது vaithikasri@yahoo.com என்னும் முகவரிக்கு இ மெயில் மூலமாகவோ ஆங்கில மாதம் 15ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். |