ஸுபாஷிதங்கள் - நன்மொழிகள் Sample of Subhashithas  Part-2 Rs 50 only

Book Available at  Vaithikasri" New no 488

T T K Road, Alwarpet. Chennai. 600018. Tamil Nadu.

INDIA  Ph(91)(44) 24361210 -24361211   E-mail: vaithikasri@yahoo.com

220 விஷயங்கள் அழகான கார்டூன் படங்களுடன் கையடக்கமாகத்தொகுக்கப்பட்டுள்ளன,
நம் வீட்டுக்கு வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள் மற்றும் நன்பர்களுக்கு அன்பளிப்பளிக்கவோ பரிசளிக்கவோ மிகச்சிறந்த புஸ்தகம் விலை ரூ 50 .00 மட்டும்

நமது வே-தங்களிலும் ஸ்த்ரங்-க-ளிலும் அமைந்துள்ள ந-மது வாழ்க்-கைக்-குத்-தே-வை-யான பற்பல நல்ல க-ருத்-துக்-கள், அ-னைத்துமக்களை-யும் , கு-றிப்-பாககுழந்தை-க-ளை-யும் இளம் வயதினர்களை-யும் சென்-ற-டைய வேண்-டும் என்-னும் உ-யர்-வான நோக்-கத்தோடு, வேத சாஸ்த்ரக்கருத்துக்களை தனது அனுபவங்களால் ஏற்பட்ட உண்மைகளை ஒரு மனிதன் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொண்டு நல்லவனாக வல்லவனாக எப்படி வாழ வேண்டும் என்னும் கருத்துக்களை, எ-ளி-மை-யான உ-தா-ஹ-ர-ணங்களுடன் கூட நன்மொழிகளை நமக்குத் தொகுத்தளித்துள்ள மஹர்ஷிகள் மிகவும் போற்றத்தக்கவர்கள். ஒவ்-வொரு ஸு-பா-ஷி-த-மும் ஒவ்-வொரு ரத்-னங்-களைப்-போன்று ஜ்வ-லிப்-பவை. ம-னதிலுள்ள அக்-ஞா-னம் (அ-றி-யாமை) என்-னும் இ-ருளை ஸு-பா-ஷிதம் என்-னும் ஜ்வாலையால் (தீபத்தால்) போக்-க-டிக்க மு-டி-யும் .

த்யஜேத் ஏகம் குலஸ்யார்த்தே க்ராமஸ்யார்த்தே குலம் த்யஜேத்
க்ராமம் ஜனபதஸ்யார்த்தே ஆத்மார்த்தே ப்ருதிவீம் த்யஜேத்

தனது குடும்பத்தைக்காப்பாற்ற ஏதாவது ஒன்றை த்யாகம் செய்யலாம். ஒரு க்ராமத்தின் நன்மைக்காக ஒரு குடும்பத்தையே த்யாகம் செய்யலாம், ஒரு தேச மக்களின் நன்மைக்காக ஒரு ஊரையே (கிராமத்தயே) த்யாகம் செய்யலாம். தனது (மோக்ஷத்திற்க்காக) நன்மைக்காக இந்த பூமியையே (உலகத்தையே) த்யாகம் செய்ய வேண்டும் .

த்யஜந்தி மித்ராணி தநைர் விஹீனம் தாராச ப்ருத்யா ச ஸுஹ்ருஜ் ஜனாச
தம் சா(அ)ர்த்தவன்தம் புநராரயந்தே ஹ்யர்தோ ஹி லோகே புருஷஸ்ய பந்து:

 செல்வமில்லாதவர்களிடமிருந்து நண்பர்கள் விலகி விடுகிறார்கள். மற்றும் மனைவியும், வேலைக்காரர்களும், நல்ல உள்ளம் கொண்டவர்களும் கூட அவர்களை விட்டு விடுகின்றார்கள். அதே மனிதன் செல்வந்தனாக ஆகும் பொழுது மறுபடி அதே மனிதர்கள் அவனையே ஆச்ரயமாக
( புகலிடமாக) வந்து அடைகின்றார்கள். ஏனெனில் உலகத்தில் செல்வம்தானே மனிதனுக்கு நெருங்கிய உறவு !

 த்யஜேத் தர்மம் தயா ஹீனம் வித்யா ஹீனம் குரும் த்யஜேத்
த்யஜேத் க்ரோதமுகீம் பார்யாம் நிஸ்ஸ்நேஹான் பாந்தவான் த்யஜேத்

தர்மமானச்செயலாக இருந்தாலும் கூட அந்தச்செயல் இறக்கமற்ற செயலாக இருந்தால் அந்தச்செயலை விட்டு விட வேண்டும்.குருவாகவே இருந்தாலும் படிப்பில்லாதவராக இருந்தால் அவரை விட்டு விட வேண்டும். அவ்வாறே கடுஞ்சொல் கூறும் மனைவியையும், அன்பில்லாத உறவினர்களையும் கூட விட்டு விட வேண்டும்

Home