Please Vendamee!! Tamil 

ப்ளீஸ் வேண்டாமே!
 வேதவித்யாலங்கார -வித்யா ரத்னம்- நன்னிலம்  ப்ருஹ்மஸ்ரீ
வை.ராஜகோபால கனபாடிகள்
(ஆசிரியர் வைதிகஸ்ரீ:)

Copies of this Books are available only with vaithikasri,
# New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet, Chennai-600 018. Tamil Nadu, Ph: 044 24361210.
vaithikasri@yahoo.com

you can order now by online

http://vaithikasri.com/guestbook/guestbook/product.asp

 

PLEASE VENDAMEE!!...

  •  

  • மனித வாழ்க்கை இனியதாக ஒற்றுமையாக அமைய கட்டுப்பாடு தேவை, இதற்குத்தான் தர்மம் என்று பெயர், கட்டுப்பாட்டை மீறி செயல்படுதலே அதர்மம் எனப்படும், தர்மத்தின்படி வாழ்பவரை தர்மமே பாதுகாக்கும்,

    அதேபோல் தர்மத்துக்கு மாறாக வாழ்பவரை அதர்மமே துன்பப்படுத்தும், ஆகவே ஒவ்வொருவரும் தர்மம் என்ன? என்பதையும் அதர்மம் என்ன? என்பதையும் அறிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்,

    குறிப்பாக எதெதெல்லாம் செய்ய வேண்டும்? என்று அறியும் முன்னர். எதெதெல்லாம் செய்யக் கூடாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும், அதர்மத்தை அறிந்து கொண்டு, அதிலிருந்து விலகி இருப்பதே நமக்கு ஏற்படும் துன்பங்களை ஆபத்துக்களை தடுக்கும் சரியான வழியாகும்,

    ஆகவேதான் மஹரிஷிகளும் சாஸ்திரங்களும் ஞ்ழூசூசுயு ஞீஙீ ஸத்யம் வத3 (உண்மையைப் பேசு) என்று தர்மத்தை  மட்டும் சொல்லாமல், நாந்ருதம் வதே3த் (பொய் சொல்லாதே) என்று அதர்மம் செய்யக் கூடாது என்பதையும்
    ஒன்றாகவே நமக்கு உபதேசிக்கின்றன,

    நமது மஹரிஷிகளும் சாஸ்திரங்களும் கூறியுள்ள அதர்மங்களை (செய்யக் கூடாத செயல்களை) பட்டியலிட்டு தர்ம சாஸ்திரம் என்னும் புஸ்தகமாக வைதிகஸ்ரீ மூலம் வெளியிட்டுள்ளோம்,


    புஸ்தகங்கள் மூலம் படித்து அறிந்து கொள்ள முடியாததைக் கூட படங்கள் மூலம் சுலபமாக அறிந்து கொள்ள முடியும், மேலும் புஸ்தகங்களை விட அழகான படங்களின் மூலம் ஒரு கருத்தை நாம் அறிந்து கொள்ளும் போது, அது நமது உள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது,

    சாஸ்திரங்களில் செய்யக் கூடாது என்று நிஷேதிக்கப்பட்ட செயல்களில் ஸுமார் நூறை மட்டும் தொகுத்து அதற்கான படங்களுடன் தற்போது வெளியிடுகிறோம்,

    தர்மத்தில் நாட்டமுள்ள அனைவரும் இந்த புஸ்தகத்தைப் படித்து , எது அதர்மம்? என்பதை அறிந்து கொண்டு, அதிலிருந்து விலகி நின்று, தாங்கள் குழந்தைகளுக்கும் தர்மம் மற்றும் அதர்மங்களை போதித்து நன்மையை அடையும்படி கேட்டுக் கொள்கிறேம்

    தவறுகளை தவறு என்று சுட்டிக்காட்டுவதே இந்த புஸ்தகத்தின் நோக்கம், இந்த புஸ்தகத்தை படித்து பார்த்து தவறுகளை கூடியவரை தவிர்த்து, செய்யும் செயலை ஸரியாகச்செய்து முழுமையான பலனை அடைந்து ஸுகமாய் வாழ ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

    Copies of this Books are available only with vaithikasri,
    # New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet, Chennai-600 018. Tamil Nadu, Ph: 044 24361210.
    vaithikasri@yahoo.com