நமது ஐம்புலன்களுக்கும் புலப்படாத பற்பல விஷயங்களையும் தங்களது தவோ வலிமையால் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் நமது மஹரிஷிகள், நாம் வாழும் இந்த உலகத்தைத்தவிர மற்ற பற்பல உலகங்கள் இருப்பதாகவும் இங்கு பிறப்பவர்கள் அங்கிருந்து வருவதாகவும், இங்கு இறப்பவர்கள் மறுபடியும் அங்கு செல்வதாகவும் நமது மஹரிஷிகள் கூறுகிறார்கள்


பலகாலங்கள் உடலுக்குள் காற்று வடிவில் அடைபட்டுக்கிடக்கும் ஜீவன், இந்த உடலை விட்டு வெளியேறி வேறு உடலெடுத்து மேலுலகம் சென்று ஸுகத்தையும் துன்பத்தை--யும் அனுபவிக்கிறது என்றும், அதன் வாழ் நாட்களில் செய்த நல்ல-தீய செயலை ஒட்டியே அதன் மறுபிறவி அமைகிறது என்றும், அந்த ஜீவனுக்கு ஏற்படும் பசியையும் தாகத்தையும் இங்கு வாழும் அவரது ரத்த ஸம்பந்தமுள்ள உறவினர்கள் முறையாக கர்மாக்களைச் செய்வதன் மூலம் தணிக்க முடியும் என்றும் சாஸ்திரங்கள் வாயிலாக நமது மஹரிஷிகள் கூறுகிறார்கள்,


மேலுலகத்திலும் மறுபிறவியிலும் சாஸ்திரங்களிலும் நம்பிக்கையுள்ள யாரோ சிலர் மட்டும் பித்ரு கர்மாக்களைச் செய்தால் போதும், இவற்றில் நம்பிக்கையில்லாத மற்றவர்கள் தனக்கு இஷ்டமில்லாவிட்டால் இவற்றைச் செய்ய வேண்டாம் என்று நினைப்பது தவறு, ஏனென்றால் பித்ரு கர்மாக்கள் என்பது தனி ஒரு மனிதனின் அல்லது தனி ஒரு குடும்பத்தின் நலனைச் சார்ந்தது அல்ல, தேசத்தில் வாழும் அனைத்து மக்களின் நலனைச் சார்ந்தது,


மறைந்த முன்னோர்களுக்கு முறையாக கர்மாக்கள் செய்யா--விடில் அந்த ஜீவன் பசி தாஹத்தால் வருந்தி கர்மா செய்ய வேண்டியவருக்கும் மட்டுமல்லாது அவர் வஸிக்கும் பகுதியி--லுள்ள அனைவருக்கும் துன்பத்தை விளைவிக்கும், குறிப்பாக துர்மரணம் ஏற்பட்டு இறக்கும் ஜீவன், இங்கு வாழும் மனிதர்களைப் பார்த்து, தான் அனுபவிக்காத ஸுகங்களை இவர்கள் மட்டும் அனுபவிக்கிறார்களே! என்று பொறாமை கொள்ளும் இந்தப்பொறாமையால் ஸுகமாக வாழ்பவருக்கும் துர்மரணம் ஏற்படுத்தி தன்னுடன் அழைத்துக்கொள்ள நினைக்குமாம், இறந்தவருக்கு முறையாக சிராத்தம் (திதி) செய்தல் போன்ற கர்மாக்களை செய்யாவிடில் பித்ருக்கள் தங்கள் பசி தாஹத்தைப் போக்கிக்கொள்ள கர்மா செய்யவேண்டியவரின் ரத்தத்தை (ஆக்ஸிடெண்ட்-ஆபரேஷன் மூலம்) குடிப்பார்களாம்


ஆகவேதான் இறந்தவருக்கு இறுதி கர்மாவைச் செய்ய மகனோ மகளோ உறவினர்களோ இல்லாத போது, அல்லது அவர்கள் கர்மா செய முன்வராத போது, அந்தப் பகுதியை ஆக்ஷி செய்யும் (கிராமத்) தலைவர், அந்த உடலுக்கு அந்தந்த மதங்களையொட்டி கர்மாவை, தானோ அல்லது தன்னைச் சேர்ந்தவர்கள் மூலமாகவோ செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்,  இதையொட்டியே இன்றும் நமது தேசத்தில் அநாத ப்ரேத ஸம்ஸ்காரத்தை -ஆங்காங்கே- உறவினர்கள் இல்லாமல் இறந்து கிடக்கும் உடல்களை -அரசாங்கமே தனது சிலவில் தஹனம் செய்கிறது- சில இடங்களில் இறந்தவர்களின் மதத்தை ஒட்டி ஸம்ஸ்காரமும் செய்யப்படுகிறது,


ஆகவே வேத சாஸ்திரங்களில் முழுமையாக நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட, தேசநலனிலும் மக்கள் நலனிலும் அக்கரையுள்ள அனைவரும் பித்ருக்களுக்கான கர்மாவை நமது முன்னோர்களைப்போல் ஈடுபாட்டுடனும் நம்பிக்கையுடனும் செய்து மக்கள் சேவை-தேச சேவை செய்ய முயற்சிக்க வேண்டும், இதற்கு ஸ்ரீ பகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்,

Copies Available at  
Vaithikasri" 
New no 488 T T K Road, Alwarpet. Chennai. 600018.
Tamil Nadu.INDIA  Ph(91)(44) 24361210 -24361211  
 Email: vaithikasri@yahoo.com