ஒவ்வொருவரும் பெற்றோர் ஜீவதசையில்(உயிருடன்) இருக்கும் போதும் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை தவறாது செய்ய வேண்டும், ஆனாலும் பெற்றோர் உயிருடன் இருக்கும் போது, பிள்ளைகள்தான் அவர்களை போஷிக்க வேண்டும் என்பதில்லை, அவர் தானாகவே தன்னைக் காப்பாற்றிக்கொள்வார், அல்லது மற்ற உறவினர்கள் நண்பர்கள் முதலியவர்களாலும் காப்பாற்றப்பட்டு விடுவார், ஆனால் பெற்றோர் இறந்த பின்னர் பித்ருக்களாக மாறிய அவருக்கு பெற்ற பிள்ளைகள்தான், முறையாக சிராத்தம் தர்ப்பணம் செது உணவளித்து பசி தாஹத்தைப் போக்க வேண்டும். யாரோ ஒருவருக்காக (ரத்த ஸம்பந்தமில்லாத) யாரோ ஒருவர் சிராத்தம் தர்ப்பணம் செய்ய சாஸ்திரம் அனுமதிக்கவில்லை, ஆகவே பிள்ளைகள், பெற்றோர் மனிதராக இருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்குச் செய்யும் பணிவிடையை விட பெற்றோர் இறந்த (பித்ருக்களான) பின்பு செய்ய வேண்டிய சிராத்தம் தர்ப்பணம் போன்ற கடமைகளை கட்டாயம் செய்ய வேண்டும். இந்தக்கருத்தையே தெய்வப்புலவர் திருவள்ளுவரும் தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கம் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்கிறார், இங்கே பித்ருக்களை வள்ளுவர் தென்புலத்தார் (தெற்கு திசையில் இருப்பவர்) என்று குறிப்பிடுகிறார், பித்ருக்களைப்பற்றியும் பரலோகத்தைப்பற்றியும் விவரிக்கும் நமது சாஸ்திரங்களில் முழுமையான சிரத்தை (நம்பிக்கை)யுடன் செய்ய வேண்டிய கர்மா என்பதால் பித்ரு கர்மாக்களுக்கு சிராத்தம் எனப்பெயர். ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பேப்பர் வடிவான தபால்களை அனுப்ப, முகவரியை ஸரியான முறையில் பின்கோட்டுடன் அதற்கான இடத்தில் எழுத வேண்டும், குறிப்பிட்ட அளவு தொகை செலுத்த வேண்டும், தபாலை அதற்கான பெட்டியில்தான் போட வேண்டும் போன்ற பற்பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன, அதைப்போலவே ஸுமார் 84 லக்ஷம் யோஜனைக்கு அப்பால் வஸிக்கும் நமது பித்ருக்களுக்கும் இங்கே மந்திரங்கள் சோல்லி செய்யப்படும் சிராத்தம் தர்ப்பணம் முதலியவை சென்றடைய சாஸ்திரங்களில் சில விதிமுறைகள் இருக்கின்றன, நமது முன்னோர்கள் கடைபிடித்த அந்த சிராத்த-தர்ப்பண விதிமுறைகளை நாமும் தெரிந்துகொண்டு கடைபிடிக்க வேண்டும். தற்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கும் குழப்பங்களுக்கும் அந்தந்த குடும்பத்தில் செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை(முறையாக) செய்யாததும் ஒரு காரணம், தெய்வங்களை விட அதிக சக்திவாந்த பித்ருக்களின் ஆசியால் அனைத்தையும் அடைய முடியும் . நாகரீகமான சூழ்நிலையிலும் கூட சாஸ்திர வாக்கியங்களில் நம்பிக்கையுடன் பித்ருகர்மாக்களைச் செய்து வருபவர்களுக்கு உதவியாக, அவர்கள் மனதில் -நாம் செய்யும் செயல் ஸரிதான்- என்னும் நம்பிக்கையை வளர்க்கும் விதமாக, வைதிகஸ்ரீ பத்திரிக்கையில் பித்ருபூஜனம் கட்டுரை வெளியிடப்படுகிறது
தற்சமயம் அவற்றை, குறிப்பாக ப்ராஹ்மணர்கள் செய்ய வேண்டிய
பித்ருகர்மாக்களைத் தொகுத்து இந்த புஸ்தகத்தை வெளியிடுகிறோம், அனைவரும்
இதிலுள்ள கருத்துக்களை படித்து பயனடைய ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும். |
|
Copies Available at |