-
தர்ம சாஸ்திரம் தமிழ் -2 புஸ்தகத்தில் நாம் செய்யக்கூடாத
சிற்சில தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. உதாஹரணமாக
-
-
தெய்வ ஸன்னிதியில் ஏற்றப்படும் தீபத்தை (திருவிளக்கை)
தரையில் வைக்கக் கூடாது (தட்டு அல்லது இலைகளின் மீது வைக்கலாம்)
-
தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யும் போது
அபிஷேகம் செய்த பாலையும், அபிஷேகம் செய்த சந்தன ஜலத்தையும் (ஒரே பாத்திரத்தில்)
ஒன்றாக சேர்க்கக் கூடாது. (தனித்தனியாக பிடித்து வைக்க வேண்டும்).
-
இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைபட்ட
தேங்காயை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது (இரண்டாக உடைக்கப்பட்ட தேங்காய்
மூடிகளைத் தான் நிவேதனம் செய்ய வேண்டும்). 4 தெய்வத்திற்கு விளக்கேற்றும்போது ஒரு
எண்ணையை மற்ற எண்ணை அல்லது நெய்யுடன் கலந்து விளக்கேற்றக் கூடாது. (நல்லெண்ணை, நெய்
முதலியவற்றால் தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும்)
-
5 ஸ்வாமி அபிஷேகத்திற்காக கிணறு, மற்றும்,
குழாயிலிருந்து எடுத்து வரும் ஜலத்தை இடது கையால் எடுத்து வரக்கூடாது.(வலது கையால்
எடுத்துவரலாம்).
-
6 ஒரு தெய்வத்தின் படத்துக்கோ விக்ரஹத்துக்கோ
போடப்பட்ட மாலையை மற்ற தெய்வத்தின் படத்துக்கோ விக்ரஹத்துக்கோ போடக்கூடாது.
-
7 சூடு செய்த(காய்ச்சிய) பாலால் தெய்வங்களுக்கு
அபிஷேகம் செய்யக்கூடாது.
-
8 புழுங்கல் அரிசியால் ஸமைக்கப்பட்டவைகளை
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
-
9 நிவேதனம் செய்யும் போதுவெத்தலையுடன் சேர்த்து
வைக்கப்படும் பாக்கை பாக்கெட்டுடன் வைத்து நிவேதனம் செய்யக்கூடாது (பாக்கு
பாக்கெட்டைப் பிரித்து வெத்தலையுடன் வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்)
-
10 எக்காரணத்தைக் கொண்டும் ஆலயங்களிலோ
பூஜையறைகளிலோ தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றி வைக்கக்கூடாது,
-
11 பிளாஸ்டிக்காலான பூக்களை தெய்வ விக்ரஹங்களின்
மீது சாத்தக் கூடாது.(படங்களின் மீது போடலாம்).
-
12 பூஜை அறையில் அலங்காரமாக அமைக்கப்படும்
எலக்ட்ரிக் (ஸீரியல்) விளக்குகளை தெய்வ விக்ரஹம் அல்லது படத்தின் மீது பட்டுக்
கொண்டிருக்குமாறு அமைக்கக் கூடாது.
-
13 திருமணமானவர்கள் பஞ்சகச்சம் மற்றும் மடிசார்
கட்டிக் கொள்ளாமல் எந்த ஒரு பூஜையையும் தானும் செய்யக்கூடாது, மற்றவருக்குச் செய்து
வைக்கவும் கூடாது.
-
14 ப்ளாஸ்டிக் ஆஸனத்தின் மீது அமர்ந்து கொண்டு
எந்த ஒரு மந்திரத்தையும் ஜபம் செய்வதோ ஹோமம் செய்வதோ கூடாது.
-
15 நாம் வஸிக்கும் கட்டடத்தில் (அபார்ட்
மெண்டில்) ஏதாவது ஒரு பகுதியில் இறந்தவர் உடல் இருக்கும் போது, தன் வீட்டில் பூஜை,
பாராயணம், ஜபம், ஹோமம், முதலிய எந்த ஒரு தெய்வ காரியங்களையும் செய்யக்கூடாது. (அந்த
உடல் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு செய்யலாம்).
-
16 வேப்பெண்ணையாலும் வேப்பெண்ணை கலந்த
எண்ணையாலும் ஆலயங்களிலோ வீட்டிலோ ஸ்வாமிக்கு தீபம் ஏற்றக்கூடாது.
-
தெய்வ வழிபாடு 6
பூஜை 13
ஹோமம்19
ஆலயங்களில் 24
குறிப்பிட்ட நேரத்தில்33
தனி நபர் கட்டுப்பாடு38
குளியல் உடை 47
உணவு முறைகள் 52
படுக்கும் போது 62
ஆண்களுக்காக 63
பெண்களுக்காக 72
நமஸ்காரம் 76
ப்ரயாணம் 80
மங்கள நிகழ்ச்சிகள் 83
பித்ரு பூஜநம் 89
மற்றவை பொது 99
-
என ஸுமார்
15 தலைப்புகளின் கீழ் 220 விஷயங்கள் அழகான கார்டூன் படங்களுடன்
கையடக்கமாகத்தொகுக்கப்பட்டுள்ளன,
-
நம் வீட்டுக்கு வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வரும்
உறவினர்கள் மற்றும் நன்பர்களுக்கு அன்பளிப்பளிக்கவோ பரிசளிக்கவோ மிகச்சிறந்த
புஸ்தகம்
-
விலை ரூ 25.00 மட்டும்