ஒவ்வொருவரின் மனதிலும் பல்வேறு சிந்தனைகள், பலவிதமான எண்ண ஓட்டங்கள், இந்த சிந்தனைகள்தான் பின்னர் பேசும் பேச்சாக செயும் செயலாக வெளிப்படுகிறது, மனதில் எழும் சிந்தனையை நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தனியொரு ஸுகம் உண்டு, அனுபவித்துப் பார்த்தால்தான் இந்த ஸுகம் புரியும்,


ஸுமார் ஒன்பது வருஷங்களாக ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து எனது மனதில் எழும் எண்ணங்களை மிகவும் நெருக்கமானவர்களான வைதிகஸ்ரீ (மாத இதழ்) வாசகர்களிடம் எழுத்து மூலமாக தெரிவித்து வந்தேன், தற்சமயமும் தெரிவித்து வருகிறேன்,


ஒருவரின் மனதில் எழும் எண்ணங்களை பகவானைத்தவிர மற்ற யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அவரவரின் தகுதிக்கு (ஸத்வ-ரஜஸ்-தமஸ்- குணங்களுக்கு)த் தகுந்தாற் போல் ஒவ்வொருவரின் எண்ணங்களும் மாறுபடும்

வைதிகமான குடும்பத்தில் பிறந்து வைதிகமான சூழ்நிலையில் வளர்ந்து-படித்து வாழும் எனது எண்ணமும் வைதிகத்தை ஒட்டியே (உலகத்தை ஒட்டி அமையாமல்) அமைந்திருக்கலாம், இந்த எனது எண்ணங்கள் ஸரியா? தவறா? என்பதை காலமும் மக்களும்தான் தீர்மானிக்க வேண்டும், இந்த எண்ணங்கள் யாருக்கும் அறிவுரை வழங்குவதற்காக அல்ல, எனது சிந்தனை ஓட்டங்களை நானே என்னை ஸுயபரிசீலனை செது கொள்வதற்காக.


ஸுமார் ஒன்பது வருஷங்களாக இந்த எண்ணங்களை வைதிகஸ்ரீ மாத இதழ் மூலம் எழுதி வரும் நான் , கடந்து வந்த எனது பாதையை (எனது எண்ணங்களின் தகுதியை) திரும்பிப் பார்க்கிறேன், ஆரம்ப கால கட்டங்களில் (2003) எனது எழுத்துக்கும் தற்சமயம் எழுதும் எழுத்துக்கும்- எண்ணங்களுக்கும் எவ்வளவு வேறுபாடு?

 

இந்த எனது எண்ணங்களை தனி ஒரு புஸ்தகமாக வெளியிட வேண்டும் என்று வாசகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்தார்கள், எனது சில சிந்தனைகள் அந்தந்த காலகட்டங்களில் அந்தந்த துறையைச் சேர்ந்தவர்களிடம் சென்றடைந்து அவை செயல்களாக உறுமாறியது என்பதால் நானும் வாசகர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டேன்பலரின் விருப்பங்களுக்கேற்ப இதை தனி ஒரு புஸ்தகமாகத் தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்,


இந்தக்கட்டுரையில் வரும் சில வாசகங்கள் மொழிக்கு-இலக்கணத்துக்கு அப்பாற்பட்டதாகக் கூட இருக்கலாம், எண்ணங்களுக்கு மொழி-இலக்கணம் ஏது?இந்த எணது எண்ணங்கள் அந்தந்த துறையைச்சேர்ந்தநபர்களிடம் சென்றடைந்து அவை செயல்களாக உறுமாறி ஸமூஹத்திற்கும் -தனி ஒரு மனிதனின் நல்வாழ்விற்கும் உறுதுணையாக இருந்தால் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன் இந்த முயற்சி வெற்றியடைய பகவான் அனுக்ரஹிக்கட்டும்

Copies Available at  
Vaithikasri" 
New no 488 T T K Road, Alwarpet. Chennai. 600018.
Tamil Nadu.INDIA  Ph(91)(44) 24361210 -24361211  
 Email: vaithikasri@yahoo.com