சகடபுரம் பூஜ்யஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராசார்ய ஸ்ரீவித்யாபிநவ
ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள் 04-01-2014 சனிக்கிழமை
சென்னையில் ராஜகோபால கனபாடிகள் கிருஹம் வந்து
ஸ்ரீ ஸீதாராம குருகுலம் வேத பாடசாலை- வைதிகஸ்ரீ அலுவலகத்தை
பார்வையிட்டுச் செய்த அனுக்ரஹ பாஷனம்

வேத: சிவ: சிவோ வேத:என்பதாக வேதம் ஸாக்ஷாத் பரமசிவனுடைய ஸ்வரூபம். அந்த சிவ ஸ்வரூபம் தான் இந்த வேதம். இரண்டுக்கும் எந்த வித்யாஸமும் இல்லை. வேதாத்யாயீ ஸதா சிவ:. வேதம் கற்றவன்தான் ஸதாசிவன், அப்பேற்பட்ட வேதத்தை ஆழமாக அத்யயனம்பண்ணியிருந்தா அவனுக்கு வேதபுருஷன் என்றே சொல்லுவார்கள். இப்பேர்பட்ட வேதத்தை அனாதிகாலமா பரம்பரையாக காப்பாத்திண்டு வந்து அத்யயனம் அத்யாபனம் மூலமா இதுவரை நமக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள் வேத வித்வான்கள்,  வேத பரம்பரையைக் காப்பாத்தித்தான் ஆகணும் என்று அதை கடோரமாக தபஸ்ஸாக எடுத்துண்டு பல கனபாடிகளும் சாஸ்திரிகளும் ஆங்காங்கே இருந்துண்டு பரம்பரையாகக் காப்பாத்திண்டு இருக்கிறார்கள்.அந்தப் பரம்பரையில் சேர்ந்தவர்தான் நம் ராஜகோபால கனபாடிகளும். ஏற்கனவே நான் சொல்ல வேண்டிய விஷயத்தை அவர் சொல்லிவிட்டார். என்னனு கேட்டா...

 

இந்த குடும்பத்துக்கும் ஸ்ரீ வித்யா பீடத்துக்கும் ரொம்ப ஸ்நேக ஸம்பந்தம் இருக்கிறதுண்ணு, அந்த ஸ்நேக சம்பந்தம் மட்டுமல்ல, எப்படியிருக்கிறது என்று கேட்டா ஸ்ரீ வித்யாபீடத்துக்கு யஜுர்வேதத்திலே ஆஸ்தானவித்வான் யாருன்னு கேட்டா அது இவர்தான்,. இவருடைய பரம்பரையெல்லாம் முதல்லேர்ந்தே மடத்திலே இருக்கிறாமாதிரிதான் பாவம் ஏற்படுகிறதே தவிர. இப்பதான் சேர்ந்தது மாதிரி கிடையவே கிடையாது.

இவருடைய புத்ரன்ஆகட்டும், புத்ரி ஆகட்டும் மாட்டுப்பெண் ஆகட்டும், விசேஷமாக எப்பவும் அன்னபூர்ணாயென்றே கூப்பிடுகிற மாமி ஆகட்டும் ,எப்பவும் ஸ்ரீ மடத்தில்தான், இங்கு(சென்னையில்) முகாம் வந்ததுதுன்னு சொன்னா,

வேத ஸேவை இங்கு (பாடசாலையில்)பண்றது மட்டுமல்ல அங்கேயும்(கேம்பிலும்) பண்ணனும் என்று வித்யார்த்திகளை யெல்லாம் தினமும் கூட்டிண்டு வந்து, அந்த கைங்கர்யம் பண்ணிண்டு யிருக்கார். இந்தமாதிரி கைங்கர்யம் இன்னும் நன்றாக நடக்கட்டும். அத்யயனம் அத்யாபனம் பரம்பரை அனுஸ்யூதமாய் இவர் மூலமா நடக்கனும். இவர் பையன் மூலமா பரம்பரை அப்படியே தொடர்ந்து வரணும்.

 

இதுக்குவேண்டிய எல்லாவிதமான அனுகூலங்களும் அம்பாள் பகவான் ப்ரத்யக்ஷமாக பண்ணி கொடுக்கணும். இருக்கிற விக்னங்களும் எல்லாம் தூரமாகி அவாளுக்கும் ஸத்புத்தி ஏற்படனும் என்று நினைக்கிறேன். இந்த வேதம் என்பது சொல்றது மட்டும் புண்ணியமில்லை அதை கேட்டாலும் அந்த பாக்யம் அவாளுக்கு கிடைக்கிறது. இந்த வேதம் என்னைக்கும் க்ரந்த பத்தமாய் பண்ணி அத்யயனம் பண்ற பரம்பரை முதலில் இருக்கவே இல்லை. அதை குருசொல்லித்தருவார். அதைக்கேட்டு சிஷ்யன் அதை அத்யயனம் பண்ணுவான். இந்த பரம்பரையாலே இது காப்பாத்தப்பட்டதாலே வேதத்துக்கு ஶ்ருதி என்று பெயர். இந்த வேதம் கேட்கறதுக்கே ஒரு பாக்கியம் இருக்கணும்.

வேற வேற ஏதோ பாட்டுக்கள் போட்டா வீட்டுக்குள்ளேர்ந்து 2கிமி தூரம் பெரிசாக கேட்கிறது. ஆனா வேதாத்யயனம் இங்க பண்றது பக்கத்துக்கு கேட்றுதுனா ஏதோ டிஸ்டர்பர்ன்ஸ் ஆகர்துன்னு சொல்றா, எதுக்குன்னு கேட்டா டிவி பார்கறதுக்கு ரேடியோ கேட்கறத்துக்கு, வேதம் இப்படி ஆறது, ஆனா அது அப்படி இல்லாமல் வேத கோஷம் வாழ்க்கையிலே கேக்கறதுக்கே பெரும் பாக்யம் என்று நினைச்சுண்டா வேதத்துக்கு உத்ஸாகம் எல்லாம் கிடைக்கும்.

 

இங்க வேதபாடசாலை அனுஸ்யூதமாக தொடர்ந்து நடக்கனும். ஸ்ரீ வித்யா பீடத்தின் அனுக்ரஹமும் ஸஹகாரமும் என்னிக்கும் இருக்கும். இது ஸ்ரீவித்யா பீடத்துக்குச் சேர்ந்த கனபாடிகளுடைய குருகுலம். இது ஸ்ரீமடத்துக்குச் சேர்ந்த குருகுலம் என்று நாம் நினைச்சிண்டுஇருக்கோம். அம்பாள்பூர்ண அனுகிரஹத்தாலே அவாளுடைய எல்லா உத்தேசத்தையும் நன்றாக நடத்தி குடுக்கணும் என்று அம்பாளுடைய சரணாரவிந்தத்தில் வேண்டிண்டு இந்த இரண்டு வார்த்தையை முடிக்கிறேன். ஹர ஹர நம: பார்வதீ பதையே ! ஹர ஹர மஹாதேவா!

Back